சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் GOAT படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் சினேகா. அழகான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு வரிசையான வாய்ப்புகளை கொடுத்தன.
முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.
புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டம் சினேகாவுக்குத்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
திருமணம்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.
ரீ என்ட்ரி: திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா விஜய் நடிப்பில் GOAT படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். அதேசமயம் சினேகாவின் நடிப்புக்கும் நல்லபடியான ரெஸ்பான்ஸே கிடைத்தது. மேலும் அவர் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாகவும் தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
சினேகா பேட்டி: இந்நிலையில் சினேகா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், “புதுப்பேட்டை கதையை நான் கேட்டபோது எனது தந்தையும் கூட இருந்தார். கதையை கேட்டுவிட்டு வந்ததும் அந்த கேரக்டரில் நடிக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. உடனே எனது அப்பாவோ, சில ஹிந்தி ஆர்ட்டிஸ்ட்டுகள் பெயரை சொல்லி அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் சொன்ன விதத்தை பார்க்கையில் உன் கேரக்டரை இயக்குநர் தவறாக காண்பிக்கமாட்டார் என்றே தோன்றுகிறது என்றார். எனது அப்பாவே அப்படி சொன்னது மிகப்பெரிய விஷயமாக பட்டது. ஏனெனில் அவர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அவரே அப்படி சொன்ன பிறகுதான் அந்தப் படத்தில் நடித்தேன்” என்றார்.