சென்னை: அஜித் நடிப்பில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் உருவாகிவருகின்றன. இரண்டு படங்களின் மீதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது. முக்கியமாக இளம் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை இயக்கிவருகிறார். இதன் காரணமாக அஜித்தை எந்த மாதிரியான ஸ்டைலில் படத்தில் அவர் காண்பிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் குட் பேட் அக்லி பற்றி ஜிவி பிரகாஷ் கூறியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டானார் அஜித்குமார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்துவிட்டாலும் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. இருப்பினும் கண்டிப்பாக விடாமுயற்சி அடுத்த வருடம் ரிலீஸாகும் என்றே தெரிகிறது. இதனை அர்ஜுனும் சமீபத்தில் ஒரு மேடையில் உறுதிப்படுத்தியிருந்தார்.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையாதபோதே அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட்டாகிவிட்டார். அதன்படி மார்க் ஆண்டனி படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி உருவாகிவருகிறது. புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துவருகிறது. இதிலும் திரிஷாதான் ஹீரோயின் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
நடிகரின் பேத்திக்கு திருமணம்..முழுக்க முழுக்க தங்கம்தான்.. அடேங்கப்பா இவ்வளவா?..வாய் பிளந்த கோலிவுட்
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமான அஜித்தின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் அஜித்தை எப்படி காண்பிக்கப்போகிறார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு, ஹைதராபாத், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்டாகின.
ஷூட்டிங்கை முடித்த அஜித்: சூழல் இப்படி இருக்க அஜித் குட் பேட் அக்லி படத்தில் தனது போர்ஷன் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். அடுத்ததாக அவரது ரேஸிங் டீம் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் F1 கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறது. அதுதொடர்பான வீடியோக்களும், ஃபோட்டோக்களும் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. மேலும் சென்னையில் நடந்த புஷ்பா 2 படத்தின் நிகழ்ச்சியில்,இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் இருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Ajithkumar: வெளிநாட்டில் சூட்டிங்கை முடித்த அஜித்.. தடவிப் பார்த்து கொண்டாட்டம்.. அழகு அள்ளுதே!
ஜிவி பிரகாஷ்: இதற்கிடையே இந்தப் படத்துக்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜிவி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர், ‘குட் பேட் அக்லி படத்தின் பின்னணி இசைக்காக காத்திருக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஜிவி பிரகாஷோ, ‘கரியர் பெஸ்ட் வந்துகொண்டிருக்கிறது’ என்று கூறி எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார். முன்னதாக அஜித் நடிப்பில் கிரீடம் படத்துக்கு ஜிவி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.