Salman Khan : பிரபல நடிகர் சல்மான் கானை வைத்து தன்னுடைய அடுத்த திரைப்பட பணிகளை விரைவில் பிரபல இயக்குனர் அட்லீ தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் டாப் 3 இடங்களில் நிச்சயம் அட்லீ இருப்பார் என்றால் அது மிகையல்ல. ராஜா ராணி திரைப்படம் தொடங்கி தமிழில் அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. இந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட் உலகிற்கு சென்றார். அங்கும் அவருடைய முதல் திரைப்படமே ஆயிரம் கோடி வசூலோடு மெகா ஹிட் பிளாக் பஸ்டராக மாறியது.