தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து.. இன்று தீர்ப்பு.. ரஜினிக்கு கிடைக்குமா நிம்மதி?.. எதிர்பார்ப்பில் கோலிவுட்

0

சென்னை: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க என்ன நடந்ததோ தெரியவில்லை; தாங்கள் பிரிவதாக அறிவித்து நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள் தனுஷ் – ஐஸ்வர்யா. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது நீதிமன்றம்.

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தை பார்த்துவிட்டு பலரும் இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்று பேசினர். ஆனால் இரண்டாவது படமான காதல் கொண்டேனில் தனது திறமையை நிரூபித்து தன்னை பேசியவர்களை பற்றி வாயடைக்க வைத்தார். அந்தப் படத்தில் தனுஷின் சிறந்த நடிப்பை பாராட்டுவதற்காக முதன்முதலாக அவரை நேரில் சந்தித்தார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2004ல் திருமணம்: பிறகு வீட்டு சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்து. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகனாக தனுஷ் மாறினார். ஆனால் அது கோலிவுட் இண்டஸ்ட்ரியில் பலருக்கும் வயிற்றெரிச்சலைத்தான் கிளப்பியது. மூத்த நடிகர்கள் சிலர் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம், தனுஷுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்வா என்று பேசினார்கள். இது ஒருபக்கம் இருக்க இருவரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்தி சென்றனர்.

Amaran: துப்பாக்கியை சரியாக பயன்படுத்திய சிவகார்த்திகேயன்.. அமரன் டீமிற்கு வாழ்த்து சொன்ன விஜய்!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பிரிவு: இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும், தாங்கள் பிரிந்து பயணப்படப்போவதாக அறிவித்தனர். திருமணமாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது; மகன்கள் தோள் உயரம் வளர்ந்துவிட்டார்கள்; நிலைமை இப்படி இருக்க இவர்கள் ஏன் இப்போது பிரிய முடிவெடுத்திருக்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். சிலரோ இந்த பிரிவுக்கு காரணங்களாக பல யூகங்களை சொன்னார்கள்.

எடுத்த முடிவில் உறுதி: இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தாலும்; இருவரும் தங்களது விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தார்கள். எனவே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள். முதல் இரண்டு விசாரணைக்கு அவர்கள் ஆஜராகவில்லை. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர். ஆனால் மூன்றாவது விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் இருவரும் ஆஜராகி தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்று தீர்ப்பு: அதனையடுத்து இந்த விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது நீதிமன்றம். என்ன மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்பதை ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி இரண்டு பேருக்கும் விவாகரத்து இல்லை என்று தீர்ப்பு வந்தால் ரஜினிகாந்த்தின் உடல்நிலைக்கும், மனநிலைக்கும் நிம்மதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்கின்றனர் கோலிவுட்டினர்.

Share.

Leave a Reply