வேறொரு நடிகையுடன் தொடர்பு? திருமண மோதிரத்தை கழட்டிய ஐஸ்வர்யா ராய்? விவாகரத்தா? ஓபனாக சொன்ன அபிஷேக் பச்சன்
நடிகர்கள் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து பெற உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மெளனம் கலைத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரை பிரபலங்களின் வாழ்க்கையில் விவாகரத்து என்னும் பூகம்பம் விடாமல் ஆட்டிப்படைத்து வருகிறது..
இந்த வரிசையில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய், தன் கணவரும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது..
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இதற்கு ஆதாரமாக, அண்மையில் தன் மகளின் 13 ஆவது பிறந்த நாளை ஐஸ்வர்யா ராய் பிரம்மாண்டமாக கொண்டாடிய போது, அந்த கொண்டாட்டத்தில் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை எனவும், கூடவே.. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு கூட இல்லையெனவும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
அதோடு இல்லாமல், ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் தனி வீட்டில் வசித்து வருவதாகவும், ஐஸ்வர்யா ராயின் கையில் அவரின் திருமண மோதிரம் இல்லையெனவும் கூறிய இணையவாசிகள்… ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதி விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக சகட்டு மேனிக்கு கொளுத்தி போட்டனர்…
கூடவே, நடிகை ஒருவருடன் அபிஷேக் பச்சனை இணைத்து பேசி பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தனர்..
இந்நிலையில்தான், தொடர் அமைத்தி காத்து வந்த அபிஷேக் பச்சன், தனது மெளனத்தை கலைத்திருக்கிறார்….
தான் நடித்த “ஐ வாண்ட் டூ டாக்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அபிஷேக் பச்சன், தன்னை சுற்றி பல வதந்திகளும், எதிர்மறையான விமர்சனங்களும் பரவி வருவதாகவும், அவற்றுக்கெல்லாம் பதிலளித்தால் தான் காணாமல் போய்விடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்..
நாம் நம்முடைய அடிப்படை குணம் மாறாமல் எப்பவும்போல் இருக்க வேண்டும் என சொல்லியிருக்கும் அபிஷேக் பச்சன், விமர்சனங்களுக்கு பயந்து ஏதாவது செய்ய முற்பட்டால், நமது செயல்களாலே நாம் தூக்கி எறியப்படுவோம் என சொல்லியிருக்கிறார்…
நான் மிகவும் நேர்மையானவன் எனவும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தான் செவிசாய்க்க விரும்பவில்லை என்ற அபிஷேக் பச்சன், நம்பிக்கை ஒளியை விடாமல் பிடித்திருந்தால், தடை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதிலிருந்து மீளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்…
கூடவே, தன்னையும், தன் சகோதரியையும் தன் அம்மா கவனித்ததால் தான், தன் தந்தை அவரின் கேரியரில் ஜொலிக்க முடிந்ததாகவும், அதே உதவியைத்தான் தனக்கு ஐஸ்வர்யா ராய் செய்து வருவதாக தெரிவித்த அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருக்கும் தைரியத்தில்தான் தான் திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் பேசியிருக்கிறார்…