ஹைதராபாத்: நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. மேலும் இவர்களது திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் பவர் சென்ட்டர்களில் ஒன்று நாகார்ஜுனா குடும்பம். அவரது மகன் நாக சைதன்யாவும் டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக தண்டெல் திரைப்படம் வரவிருக்கிறது. இதற்கிடையே சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில காரணங்களால் பிரிந்தார். அந்த பிரிவுக்கு; சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடித்தது மட்டுமின்றி கிளாமராக நடித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சோபிதா – சைதன்யா: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக சோபிதா துலிபாலாவை காதலித்தார். சோபிதாவும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஹிந்தியில் அறிமுகமாகி தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர். சோபிதா – நாக சைதன்யாவின் காதல் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து இரு வீட்டாரும் இவர்களது திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்தார்கள்.
டிசம்பர் மாதம் திருமணம்: நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக முடிந்த சூழலில் திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதன்படி இவர்களது திருமணம் அடுத்த மாதம் நான்காம் தேதி நடக்கவிருக்கிறது. முதலில் ராஜஸ்தானில் நடப்பதாக இருந்த திருமணம்; இப்போது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கவிருக்கிறது. அவர்களது திருமண பத்திரிகை புகைப்படமும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இதிலும் நெட்ஃப்ளிக்ஸ்: சூழல் இப்படி இருக்க நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வை ஸ்ட்ரீம் செய்தது போல் இவர்களது திருமணத்தையும் ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும்; அதற்காக 50 கோடி ரூபாய்வரை பண பரிவர்த்தை நடந்திருப்பதாகவும் சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு; நாக சைதன்யா – சோபிதா திருமணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
செய்யாறு பாலு பேட்டி: அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “சமந்தாவை நாகார்ஜுனா குடும்பம் ரொம்பவே அழ வைத்துவிட்டது. நாக சைதன்யா – சமந்தா பிரிவுக்கு பிறகு சமந்தாவுக்கு நூறு கோடி ரூபாய்வரை ஜீவனாம்சமாக கொடுக்க நாகார்ஜுனாவின் குடும்பம் முன் வந்தது. ஆனால் சமந்தாவோ சிரித்துக்கொண்டே அந்தப் பணத்தை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார். இப்போது அவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
சமந்தாவை வெறுப்பேற்ற முடிவு: சமீபத்தில்கூட வருண் தவானிடம் ஒரு பேட்டியில் பேசிய சமந்தா, ‘எனது வாழ்க்கையிலேயே என்னுடைய எக்ஸ் லவ்வருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்தேன். அதுதான் நான் செய்த தேவையில்லாத செலவு’ என்று சொல்லிவிட்டார். அது நாக சைதன்யாவையும், நாகார்ஜுனாவையும் ரொம்பவே கோபப்படுத்திவிட்டது. இப்போது நடக்கவிருக்கும் நாக சைதன்யாவின் திருமணத்தை நூறு கோடி ரூபாய் அளவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். சமந்தாவை வெறுப்பேற்றவே இப்படி ஒரு பிரமாண்டமான திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
நெட்ஃப்ளிக்ஸ் கண்டிஷன்: இந்தத் திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஸ்ட்ரீம் செய்யவிருக்கிறது. முதலில் நெருங்கிய சொந்தங்களை மட்டும்தான் இந்தத் திருமணத்துக்கு அழைக்க நாகார்ஜுனா தரப்பு முடிவு செய்திருந்தது. ஆனால் அப்படி செய்தால் திருமண வீடியோவை யாரும் பார்க்கமாட்டார்கள். எனவே பிரபலங்கள் அனைவரையும் அழையுங்கள் என்று நெட்ஃப்ளிக்ஸ் கண்டிஷன் போட்டதால்தான் பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என அனைத்து திரைத்துறையிலிருந்தும் பிரபலங்கள் அழைக்கப்படவிருக்கிறார்கள்” என்றார்.