புறநானூறு படத்தில் பிரச்னை?.. சிவகார்த்திகேயனை திட்டிவிட்டாரா சுதா கொங்கரா?.. கோலிவுட்டில் பரபரப்பு

0

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் 350 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. மிக விரைவில் படத்தின் சக்சஸ் மீட் நடக்கும் என்று தெரிகிறது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு கடந்த மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அமரன், அயலான், மாவீரன் ஆகிய அந்த படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. குறிப்பாக கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. கமல் ஹாசன் தயாரித்திருக்க, ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கினார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

மரண மாஸ் ஹிட்: படத்தை பார்த்த ரசிகர்கள் அமரனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். சிவகார்த்திகேயனின் நடிப்பு, சாய் பல்லவியின் நடிப்பு என அத்தனையும் பக்காவாக இருந்ததாக கூறினார்கள். இப்படி ஒருபக்கம் விமர்சன ரீதியாக படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. மறுபக்கம் வசூல் ரீதியாகவும் படம் மெகா ஹிட்தான். குறிப்பாக சூர்யாவின் கங்குவா திரைப்படமும் சரியாக இல்லாததால் அமரனுக்கு கூட்டம் மேற்கொண்டு கூடியது. இதன் காரணமாக 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது படம்.

களத்துல இறங்குங்க விஜய்.. இதெல்லாம் பண்ணையார்த்தனம்.. தளபதியை ரவுண்டு கட்டிய ப்ளூ சட்டை மாறன்!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

அடுத்த படங்கள்: அமரன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் எகிறியிருக்கிறது. அடுத்த படங்களுக்கு அவர் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்வரை சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இனி சிவகார்த்திகேயனின் கரியரை அமரனுக்கு முன் அமரனுக்கு பின் என பிரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.

புறநானூறு: இதற்கிடையே சூர்யாவை வைத்து சுதா கொங்கரா புறநானூறு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அதில் சில பிரச்னைகள் வந்ததன் காரணமாக படத்திலிருந்து சூர்யா வெளியேறி; சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். இந்தப் படம் எஸ்கேவின் 25ஆவது படமாக உருவாவது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் மீது கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் ராஷ்மிகா மந்தனா காதலர்.. புஷ்பா 3 படம் வேற வருதா? எண்டே கிடையாதா?

வெடித்த பிரச்னை?: இந்நிலையில் புறநானூறு படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் அறிவிப்பை வீடியோவோடு வெளியிடலாம் என சுதா முடிவு செய்ததாகவும் அதற்கான ஷூட்டிங்கை அவர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஜெயம் ரவி கலந்துகொண்டார் என்றும்; பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஷூட் செய்ய சுதா பிளான் செய்ததாகவும் தெரிகிறது. ஆனால் அந்த ஷூட்டுக்கு சிவகார்த்திகேயன் ஓவர் தாடியுடன் வந்தாராம்.

அதனைப் பார்த்த சுதாவோ இவ்வளவு தாடி இருந்தால் எப்படி என்று கோபமாக கூறினாராம். அதனை சிவகார்த்திகேயன் எதிர்பார்க்கவில்லையாம். இதன் காரணமாக கோபமடைந்த அவர் ஷூட்டிங்கிலிருந்து கிளம்பிவிட்டார் என்றும்; அதனால் படத்தின் பணிகள் மேற்கொண்டு தள்ளிப்போவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இருந்தாலும் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply