Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிக்க இறுதிவரை மறுத்து அதன் பிறகு கட்டாயத்தின் பேரில் நடித்து கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.c
லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னதுமே அனைவருக்கும் மனதில் தோன்றும் நபர் தான் நயன்தாரா. ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கு, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சட்டென்று நினைவில் வரும் ஒரு நடிகை தான் விஜயசாந்தி. கோலிவுட் திரையுலக வரலாற்றைத் தாண்டி, இந்திய சினிமா வரலாற்றிலேயே ஆக்சன் நாயகியாக பல திரைப்படங்களில் வலம் வந்த ஒரே நடிகை விஜயசாந்தி என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை அவர். ராம்கி போன்ற பல ஆக்சன் ஹீரோக்களே விஜயசாந்தியின் திரைப்படத்தில் கௌரவ வேதத்தில் நடித்து அசத்திய காலங்களும் உண்டு.