விவாதத்தை கிளப்பும் வசனம்.. விடுதலை 2 டிரெய்லரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா.?: வெற்றிமாறனின் சம்பவம்!

0

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ‘விடுதலை பார்ட் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள இப்படத்தின் மாஸான டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த வருட ரிலீசில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியிருக்கும் படம் ‘விடுதலை பார்ட் 2’. நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் மீது கோலிவுட் வட்டாரமே மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பயங்கரமாக உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்த்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் படங்களை அனைவருக்கும் பிடித்தபடி இயக்கி வருபவர் வெற்றிமாறன். இதுவரை எந்தவொரு தோல்வி படங்களும் கொடுக்காமல், தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் இவருக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது இயக்கத்தில் கடந்தாண்டு ‘விடுதலை’ படம் வெளியானது.

சூரியை கதாநாயகனாக்கி வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காவல்துறையின் அதிகார அத்துமீறல்களை தோலுரித்து காட்டிய இப்படம் பலத்தரப்பில் இருந்து பாராட்டுக்களை குவித்ததுடன், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தும் இருந்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

இந்நிலையில் தற்போது ‘விடுதலை பார்ட் 2’ படத்தினை இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம் இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வாத்தியராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் இளமைக்காலத்தையும், அவர் போலீசில் மாட்டிய பின் நடப்பவை குறித்தும் பேசுவதை போல் ‘விடுதலை 2’ கதைக்களம் அமைந்துள்ளது டிரெய்லரிலே தெளிவாக தெரிகிறது.

அத்துடன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் இளமைக்கால டீ ஏஜிங் லுக், மஞ்சு வாரியருடனான காதல், முதல் பாகத்தில் இல்லாத பிரகாஷ் ராஜ், கிஷோர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளன. மேலும், வெற்றிமாறன் பாணியிலான வசனங்களும் பலர் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.

வருங்கால கணவர் குறித்து ஓபனாக பேசிய ராஷ்மிகா மந்தனா.. தெரிஞ்ச விஷயம் தானாம்!

வன்முறை எங்கள் மொழி இல்லை. ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும். ஒடுக்கப்பட்டவர்களுக்காக நிக்கிற எல்லாரும் நம்ம தோழர்கள் தான் போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் அளித்துள்ளன. குறிப்பாக ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது’ என்ற டையலாக் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

தளபதி 69 ரிலீசுக்கு முன்பை வசூலை தொடங்கி மாஸ் காட்டி வருகிறது

இந்த வசனம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் குறிப்பதை போன்று இருப்பதாகவ நெட்டிசன்கள் இணையத்தில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். மொத்தத்தில் மக்களுக்காக போராடுபவர்களை, அதிகாரவர்க்கம் எவ்வாறு பிரிவினைவாதிகளாக சித்தரிக்கிறது என்பதை பேசும் விதமாக விடுதலை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.

இதனால் ‘விடுதலை பார்ட் 2’ ரிலீசுக்கு பின்பாக பல்வேறு விவாதங்களை உண்டு பண்ணும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply