அட்லீயின் வளர்ச்சியால் பொறாமையில் பாலிவுட் இயக்குநர்கள்?.. அந்தணன் சொன்ன அதிர்ச்சியான விஷயம்!

0

சென்னை: இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து ஜவான் எனும் படத்தைக் கொடுத்து பல முன்னணி பாலிவுட் இயக்குநர்களாலே முடியாத 1000 கோடி சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். கோலிவுட்டில் இதுவரை ஒரு படம் கூட அந்த சாதனையை படைக்காத நிலையில், கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ அந்த சாதனையை படைத்திருக்கிறார் என்றால் இயல்பாகவே பொறாமையும் பிரச்சனைகளும் முளைக்கத்தான் செய்யும்.

இயக்குநர் என்பதை தாண்டி தற்போது பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் அட்லீ மாறியிருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தின ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன.

அந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநர் காலீஸ் இயக்கியிருந்தாலும் பணம் போட்ட தயாரிப்பாளரான அட்லீ தான் இயக்கிய படம் போலவே அந்த படத்தை முன்னின்று புரமோட் செய்து வருகிறார். சமீபத்தில், கபில் ஷர்மா நிகழ்ச்சியில் அட்லீயை அசிங்கப்படுத்தி விட்டார் என சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், அந்தணன் அதுதொடர்பாக பேசியுள்ளார்.

அட்லீ அவமானப்படுத்தப்பட்டாரா?: தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நம்ம ஊரில் காப் வித் டிடி நிகழ்ச்சி போன்று ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கபில் ஷர்மா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அட்லீ, வருண் தவான், வாமிகா கபி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், உங்கள் முதல் படத்திற்காக நீங்கள் கதை சொல்லும் போது, அட்லீ எங்கே என உங்களிடமே கேட்டுள்ளார்களா? என கபில் கேள்வி எழுப்ப, ஏ.ஆர். முருகதாஸ் சாருக்குத்தான் நான் நன்றி சொல்லணும். அவர் தான் என் முதல் படத்தை தயாரித்தார். அவர் என் உருவத்தை எல்லாம் பார்க்கவில்லை. என் உழைப்பை மட்டுமே பார்த்தார் என அட்லீ அவரது கேள்விக்கு பதிலளித்திருந்தார். ஆனால், அட்லீயை உருவ கேலி செய்துவிட்டார் கபில் ஷர்மா என சர்ச்சை சோஷியல் மீடியாவில் வெடித்த நிலையில், அதற்கு அவரும் விளக்கம் அளித்திருக்கிறார் என அந்தணன் தனது வீடியோவில் பேசியுள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

பாலிவுட்டில் அட்லீக்கு எதிராக: அம்பானி திருமணம் முதல் அனைத்து இடங்களிலும் அட்லீ சென்று வருகிறார். அவர் கோலிவுட் இயக்குநர் என்பதை எல்லாம் பலரும் மறந்து பாலிவுட் செலிபிரிட்டியாகவே பார்க்கின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து ஒருவர் வந்து கடை போட்டு சம்பாதித்தால் யாருக்காக இருந்தாலும் பொறாமை வரத்தானே செய்யும். அதுபோன்ற சூழ்ச்சிகள் மற்றும் சதி வேலைகள் அட்லீக்கு எதிராகவும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதையெல்லாம் சமாளிக்கும் இடத்துக்கு அட்லீ வந்திருப்பது தான் இதில் முக்கியமான விஷயம் என அந்தணன் கூறியுள்ளார்.

வசூல் வேட்டை நடத்துமா?: ஜவான் படத்தை போல அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் வசூல் வேட்டை நடத்துமா என்பது கேள்விக்குறி தான். விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு இதுவரை இந்தியில் வெளியான படங்களிலேயே ஸ்ட்ரீ 2 தான் அதிக வசூல் செய்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் பாலிவுட்டில் 600 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய நிலையில், அட்லீ தயாரித்துள்ள படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து அட்லீ இயக்கப் போகும் அவரது 6வது படத்துக்குத்தான் ஒட்டுமொத்த இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது.

Share.

Leave a Reply