சென்னை: ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் ஹிந்தியில் பிஸி ஆர்ட்டிஸ்ட். ஆனால் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருக்கும் தேவரா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். விரைவில் தமிழ் திரையிலும் அவரை பார்க்கலாம். இந்தச் சூழலில் ஜான்வியின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும் வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
Kavin: திரிஷாவா.. நயன்தாராவா.. இவ்வளவு டஃப் கேள்விக்கு கூலாக பதில் சொன்ன கவின்!
பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேவரா 1 படத்தில் நடித்திருக்கிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது.
அடுத்த படம்: இந்நிலையில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஈரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அவர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்கவிருப்பதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரம் படத்துக்கு கேமராவும் மனோஜ்தான் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.