Cinema Studio : இந்திய அளவில் இல்லாமல் ஆசியா அளவில் மிகப்பெரிய சினிமா ஸ்டூடியோ, தமிழக தலைநகர் சென்னையில் தான் செயல்பட்டு வந்துள்ளது.
நூறாண்டு கடந்த மிக பழமையான ஒரு திரைத்துறை தான் கோலிவுட் திரைத்துறை. அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில், தென்னிந்தியாவின் பல மொழி திரைப்படங்களின் கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு பணிகளை நடத்தியது அப்போதைய மதராஸ் பட்டினத்தில் நான் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை அதுதான். கிட்டத்தட்ட 1980களின் இறுதி வரை மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் படபிடிப்புகள் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் தற்போதைய சென்னையில் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்த ஒரு சினிமா ஸ்டூடியோ சென்னையில் இருந்து வந்தது.