இது எத்தனாவதுன்னு தெரியலையே?.. மீண்டும் காதலில் விழுந்த பாஸ் நடிகரின் மகள்.. அம்பலப்படுத்திய தீபாவளி

0

சென்னை: பாஸ் நடிகரின் மகள் சமீபத்தில் தான் பிரேக்கப் ஆகி வருத்தத்தில் இருந்த நிலையில், தீபாவளி அதுவுமாக புதிய காதலருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கசிந்த தகவல் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தவர் தான் அந்த வாரிசு நடிகை.

நடிகரின் மகள் என்பதால் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், ஆரம்பத்தில் நடிக்கவே தெரியாத நிலையில், அவருக்கு லக்கே இல்லாமல் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வந்தன.

அதன் காரணமாகவே சில ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் விடுத்திருந்த அந்த வாரிசு நடிகை காதலில் அடிக்கடி விழுந்து திடீரென பிரேக்கப்பும் செய்து சர்ச்சை நடிகையாகவே மாறிவிட்டார்.

3வது காதலரா?: ஒல்லி நடிகர் முதல் சித்து நடிகர் வரை பல நடிகர்களுடன் நெருங்கி பழகி கிசுகிசுக்களில் சிக்கிய அந்த வாரிசு நடிகை வெளிநாட்டு நபரை காதலிப்பதாக அறிவித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தினார். ஆனால், நடிகையுடன் காதலை தொடர முடியாமல் அந்த நபர் வெளிநாட்டுக்கே தப்பித்து ஓடிவிட்டார். அதன் பின்னர் வடநாட்டவர் ஒருவரையும் அப்பா இவரைத்தான் காதலிக்கிறேன். இவருடன் தான் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன் என அறிமுகப்படுத்திய அந்த நடிகை சமீபத்தில் அவரும் தன்னை ஏமாற்றி விட்டார் என புலம்பித் தவித்தார். இந்நிலையில், 3வதாக ஒருவருடன் காதல் வலையில் நடிகை விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

இன்னொரு வடநாட்டவர்: அடிக்கடி மும்பையிலேயே முகாமிட்டுள்ள வாரிசு நடிகை மீண்டும் ஒரு வடநாட்டவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. நல்லா பப்ளியாக இருக்கும் அந்த நபர் ஒரு தொழிலதிபர் என்கின்றனர். 2வது முறையாக பிரேக்கப் செய்து இருக்கும் நடிகைக்கு தற்போது அவர் தான் ஆதரவு என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

அம்பலப்படுத்திய தீபாவளி: நடிகை இதுவரை தனது புதிய காதல் குறித்து காதலர் குறித்தோ வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தீபாவளி அதுவுமாக புத்தாடையுடன் புன்னகை பூக்க காரில் ஏறி நடிகை அமரும் போது அவருடன் காரில் சட்டென ஒரு உருவம் அவர் அருகே வந்து அமர்ந்ததை பார்த்த சினிமா பிரபலங்கள் ஷாக் ஆகி இவர் தான் நடிகையின் அடுத்த காதலரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கூடிய சீக்கிரமே நடிகையே அறிமுகப்படுத்துவார் வெயிட் பண்ணுங்கள் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Share.

Leave a Reply