கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானதுதான் ஒடிடி. திரையரங்குகளில் பார்ப்பதைவிட ஒடிடியில் பார்வையாளர்கள் அதிகம். அதுவும் சிலர் திரையரங்கில் ஒருமுறைப் பார்த்துவிட்டு ஒடிடியில் தோன்றும் நேரமெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். அந்தவகையில் இந்த வாரம் இறுதிக்குள் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்களைப் பார்ப்போம்.
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் வேட்டையன். ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியானபோதே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நவம்பர் 8ம் தேதி இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
ஏஆர்எம்:
டொவினோ தாமஸ் நடிப்பில் ஜிதின் லால் இயக்கிய இந்த மலையாள படம் நவம்பர் 8ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. சமீபக்காலமாக கோலிவுட் ரசிகர்களுக்கு மலையாள படங்களும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடலே தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
சிட்டடெல் ஹனி பனி:
நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள இந்தத் தொடர் நாளை அமெசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தத் தொடரின் குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டது. இதனையடுத்து சமந்தாவின் கம்பேக் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பை தாங்கி நிற்கிறது.