இப்படியே போனா சரிப்பட்டு வராது..இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி ?ஹீரோ இவரா ?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. தன் கரியரில் ஆரம்பகாலகட்டத்தில் காதல் படங்களாக நடித்து வெற்றி கண்டு காதல் நாயகனாக வலம் வந்தார். அதன் பிறகு பேராண்மை என்ற திரைப்படம் அவரின் திரைவாழ்க்கையை அப்படியே மாற்றியது. அதுவரை காதல் நாயகனாக சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவி பேராண்மை படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

அதைத்தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்த ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கல்ட் க்ளாஸிக் அந்தஸ்தை பெற்ற தனி ஒருவன் படத்திற்கு பிறகும் ஜெயம் ரவி தரமான படங்களாக தொடர்ந்து கொடுத்து வந்தார். இதற்கிடையில் சில தோல்வி படங்களால் துவண்டிருந்த ஜெயம் ரவி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் பார்மிற்கு வந்தார்.

சூர்யா vs தனுஷ்..சூடுபிடிக்கும் கோலிவுட்..சபாஷ் சரியான போட்டி..!

பொன்னியின் செல்வன் படம் அவரின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. ஆனால் அதன் பிறகு இறைவன், சைரன் போன்ற படங்கள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. எனவே மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டும் என உழைத்துக்கொண்டிருந்தார் ஜெயம் ரவி. அந்த வகையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த பிரதர் திரைப்படத்தை மிகவும் நம்பியிருந்தார் ஜெயம் ரவி.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரதர் திரைப்படம் ஜெயம் ரவி நம்பிக்கையை பொய்யாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். கலவையான விமர்சனங்களை பெற்ற பிரதர் திரைப்படம் ஜெயம் ரவி எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை. இருப்பினும் அப்சட்டாகாத ஜெயம் ரவி தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்ற முடிவை ஜெயம் ரவி எடுத்துள்ளார். எனவே விரைவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாக ஜெயம் ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயம் ரவி தனக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பேசி வந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

THUG LIFE-ல கமல்ஹாசன் வேற மாறி தெறிக்க விட்டு இருக்காரு.!

இதையடுத்து தான் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து சறுக்கி வருவதால் விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளதாக ஜெயம் ரவி முடிவெடுத்துள்ளாராம். அநேகமாக அடுத்தாண்டு ஜெயம் ரவி இயக்குனர் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.கண்டிப்பாக யோகி பாபு தான் அப்படத்தில் ஹீரோவாக நடிப்பார் என தெரிகின்றது.எப்படி தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பிசியாக இருக்கின்றாரோ அதைப்போல ஜெயம் ரவியும் ஒரு இயக்குனராக வெற்றிகரமாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share.

Leave a Reply