எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் மூன்று புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்

0

சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்களை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று தமிழ்த் திரையுலகில் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கின்ற மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாள் காணக் கொண்டிருக்கின்ற அவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும், அரசின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்தியத் திரைப்படத் திறனாய்வு கழகத்தின் மூலம் சிறிய முயற்சியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள். இவ்விழாவிற்கு 2008-ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் முதல் முதலாக நிதியுதவி வழங்கி, இந்த விழா நடைபெறுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார்கள்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

உலகின் சிறந்த திரைப்படங்களையும், திரைப்பட இயக்குனர்களையும் கொண்டாடும் நிகழ்வாக மாறி, தற்போது இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாக்களில் ஒன்றாக மாறியுள்ளது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழாவில் வரலாற்றிலேயே முதன் முறையாகவும், இந்திய திரைப்பட விழாக்களில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 177 திரைப்படங்களையும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன், விருது பெற்ற 40 திரைப்படங்களும் திரையிட உள்ளதற்கும் செய்தி கிடைப்பதற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதேபோல, எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்கள் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் துவங்க இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தென்கிழக்கு ஆசியாவின் முன்னனித் திரைப்பட விழாக்களில் ஒன்றாக உயர்த்தவும், புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் திரை கலைஞர்களையும், உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களையும், திரைப்பட இயக்குனர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஈர்க்கும் வகையில் இந்நிகழ்வை மாற்ற முயற்சிக்கும் விழா குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து, சிறப்பாக இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட நடிகைகள் பூர்ணிமா, குஷ்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share.

Leave a Reply