எளிய மனிதர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக, எதார்த்தமாக… – என்.சிவகுரு

0

தமிழ் சினிமா ஒரு புது வழியில் செல்லத் துவங்கியுள்ளதின் அடையாள மாக ஓடிடி (அமேசான் பிரைம்) தளத்தில் வெளிவந்துள்ள “நந்தன்”. சாதிய, தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமில்லா போராட்டத்தை நடத்தி வரும் இடது சாரிகளுக்கு பலம் சேர்க்கும் ஒரு புது ஆயுதம் நந்தன். கதை கரு கற்பனை அல்ல… நிஜமே! தமிழகச் சூழலில் சாதியப் படி நிலைகள் பற்றி ஏராளமான தரவுகளும் அதையொட்டிய சான்றுகளும் ஆய்வறிக்கைகளும் ஏராளம். இறுகிப் போன சாதிய ஆதிக்க வெறி சமகா லத்தில் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள எவ்வளவு அப்பாவி பட்டியலின மக்களின் உயிரை பறித்துள்ளது என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிலும் அதிகாரம் தங்களிடமும் , சார்ந்தவர்களிடத்திலும் இருப்பதே சிறந்தது என கருதும் ஒரு மனநிலை இன்னமும் நீடிக் கிறது. அதை உடைப்பதற்கு பேருதவியாக இருக்கும் ஒரு திரைவடிவமே “நந்தன்”. கிராம ஊராட்சி தலைமைப் பொறுப்பு தன்னை விட்டு யாரிடமும் போய் விடக் கூடாது அதுவும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர் களுக்கு போய் விடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்ட ஒருவர், அரசின் சுழற்சி முறையால் பட்டியலின மக்களுக்காக மாற்றப்படும் போது, தன் அதிகாரம் சற்றும் குறையக்கூடாது என்பதற்காக தானே ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை எந்த பணி யையும் செய்ய விடாமல் தடுப்பது, அதில் சில பிரச்சனைகள் வரும் போது அதை அடாவடித் தனத்தால் கட்டுப்படுத்துவது, மிரட்டுவது, உடைமைகளை தாக்கி, சேதப்படுத்துவது , அந்த தடைகளை எல்லாம் கடந்து அதிகாரத் தின் நாற்காலியில் அமர்வதே கதையின் சுருக்கம். இந்த கதையை நிஜ வடிவத்தில் கண்டு அதற்கெதிரான குறிப்பிடத்தக்க போராட்டங் களை நடத்திய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணிக்கும் உண்டு என்பதால் இந்த படம் நமக்கு நெருக்கமாகிறது. இது ஒருபுறம் இருந்தா லும், தமிழகத்தில் பல்லாண்டுகளாக நிலவி வரும் இந்த கொடுமையை பொது வெளியில் பேசு பொருளாக மாற்ற , விவாதம் நடத்த, ஒரு அறம் சார்ந்த முடிவை தமிழ் சமூகம் எடுக்க “நந்தன்” நிச்சயமாக உதவும். இந்த சிக்கலான பிரச்சனையை மிக தீர்க்கமாக கதைக் களமாக கொண்டு ஒரு திரைக்கதையை உருவாக்கி, எவ்வித நெருட லும் இல்லாமல், பிம்பங்களை தகர்த்து, சமூ கத்துக்கு கடத்த வேண்டியதை குறியீடுகளின் மூலமாக, அதையும் எளிய வகையில் எல்லோ ருக்கும் விளங்கும் வண்ணம் கொடுத்த இயக்கு நர் சரவணன் அவர்களை எவ்வளவு பாராட்டி னாலும் தகும்.

குறியீடுகளின் குவிப்பு

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் குறியீடுகளே நமக்கு கதையை சொல்லும். படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை மிக நுணுக்கமாக அந்த காட்சிக்கேற்ற குறியீட்டை மிக நேர்த்தியாக படம் பிடித்து உள்ளார். உதாரணமாக, முதல் காட்சி ஊரில் உள்ள ஆதிக்க சாதியினர் ஒரு கோவிலில் உட்கார்ந்து யார் ஊராட்சி மன்ற தலைவர் என்பதை பேசி முடிவெடுக்கும் பேச்சுவார்த்தை நடப்பதை காலணிகள் பேசுவது போல் அமைத்திருப் பார். என்னே ஒரு வடிவம். கதாநாயகன் மகன் ஒரு காட்சியில் பள்ளிக்கு செல்ல முடியாது என சொல்வார்.. தாய் கண்டிப்போடு பேசி மகனை அங்கி ருக்கும் வேலி காட்டாமணக்கு செடியால் அடித்து, பள்ளிக்கு அழைத்து செல்வார். அந்த செடி தானே தன்னை அடித்தது என அதற்கு ஒரு குழி நோண்டி புதைப்பான் மகன். நாளடை வில் அது மண்ணிலிருந்து துளிர்விடும் ஆச்ச ரியத்தை கண்டு அந்த செடியோடு பேச துவங்குவான். நம்பிக்கையின் அடையாள மாக அதை நேர்த்தியான குறியீடாகச் சொல்லியிருப்பார். ஊராட்சியின் பெயர்ப் பலகையில் ஒரு பட்டியலினத்தவரின் பெயர் எழுதப்படக் கூடாது என்பதற்காக ஆதிக்க சாதியினர் செய்யும் அட்டூழியம், அதை கதையின் நாயகனே பார்க்க நேரிடும் காட்சியில் தன் உண்மை யான பெயர் (அம்பேத் குமார்) பாதியிலேயே நிற்பதையும், தன்னை குழிபானை என விளிக்கும் ஆதிக்க சாதியினரின் வன்மத்தை யும் ஒப்பிட்டுக் காட்டும் காட்சியின் குறியீட்டு நேர்த்தி மிகச் சிறப்பு. ஊராட்சி மன்ற அலுவலகம் சிதிலம டைந்து இருந்தாலும் பரவாயில்லை, தான் அமர்ந்த அந்த பதவி நாற்காலி போய் விடக் கூடாது என்பதன் அடையாளமாகக் காட்டப்ப டும் காலி நாற்காலி காட்சியின் ஆழத்தை பார்க்கும் போது நிச்சயமாக உணர முடியும். அதே போல் தேசியக் கொடி ஏற்ற மறுக்கப்படும் காட்சி, துக்க வீட்டில் நடக்கும் சடங்குகளையொட்டி குறியீடாக காட்டும் காட்சிகளும் மிக அற்புதம். இப்படி இந்த படத்தின் ஒவ்வொரு காட்சி யிலும் ஒரு நல்ல விசயமும் கடத்தப்படும். சம்மட்டி அடி போல் சில காட்சிகளும் உண்டு. காரில் முந்திரி பருப்பு வாங்க வந்து காசு கொடுக்காமல் ஏமாற்றி செல்லும் ஒருவன், உடைந்த சிலைகளே பட்டியலின மக்களின் வழிபாட்டு தெய்வங்களாக, கல்வி அறிவு பெற்ற எதிர்க் கேள்வி கேட்பவனை வஞ்சக மாகக் கொலை செய்வது, அரசின் நடவடிக் கைகளையே கேள்வி கேட்கும் அரசியல்வாதி களை, நேர்மையாக துணிந்து பணியாற்றும் அதிகாரிகளால் கம்பீரமாக எதிர் கொள்ள முடியும் என்பதை காட்டும் விதம். என பல காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

நடிக்கவில்லை: வாழ்ந்துள்ளார்கள்

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

இந்த படத்தின் வெற்றியின் மிக முக்கிய பங்கு இயக்குநருக்கு என்றாலும் திரையில் அதை மிக அற்புதமாக நடித்துள்ள அத்தனை கலைஞர்களையே சாரும். ஆஹா ..எவ்வளவு அழகியல்.. எளிய மனிதர்களின் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக எதார்த்தமாகப் பட மாக்கியுள்ளார்கள் என வியக்க வைக்கும் பேராற்றல். திரைத் துறையில் நீண்ட காலமாக இருக்கும் சசிகுமார், பாலாஜி சக்திவேல் இரு வரும் உச்சம். என்னே ஒரு உடல் மொழி, முக பாவனை, சாதி ஆதிக்கத்தை, திமிரை, எள்ளலை பன்முக நடிப்பாற்றலைக் காட்டி அசத்தி விட்டார்கள். சமுத்திரகனியின் கம்பீரம் சிகரம். இதையெல்லாம் தாண்டி ஒடுக்கப்படு வோராக வாழ்ந்துள்ளார்கள் பெயர் தெரியாத பலர். நாயகனின் ஆத்தாவாக , மகனாக, மகனை வஞ்சக விபத்தில் இழந்த தாய், தகப்பன், ஒரு பக்க மீசையை இழக்கும் ஒருவர், நாயகனுக்கு போட்டியாக குத்து கால் போட்டு ஒன்றிய அலுவலகத்தில் ஏதுமறியா அப்பாவியாக நடிக்கும் ஒருவர், ஒன்றிய அலுவ லகத்தில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி யின் எள்ளல் நடிப்பு, ஊராட்சி மன்ற கிளார்க்காக நடித்தவர், ஆதிக்க சாதியினரின் படை பரிவாரமாக வரும் தரும.சரவணன் உள்ளிட்ட ஒரு பெரிய பட்டாளத்தையே மிக எதார்த்தமாக மிகை, குறை இல்லாமல் முறை யாக பயிற்றுவித்து கச்சிதமாக வேலை வாங்கி யுள்ளார் இயக்குநர். இவர்களால் மட்டுமே இந்த திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

பொது புத்தியில் விவாதமாக்க

இந்த திரைப்படம் எப்போது வெற்றி பெறும் என்றால் போராடிப் பெற்ற உரிமையை பட்டியலின மக்கள் தைரியமாக களமாடத் துவங்கும்போதும், சாதிய ஆதிக்க சக்திகள் தங்கள் குறுகிய எண்ணங்களை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு சமூக நீரோட்டத்தில் எல்லோ ருக்கும் சம வாய்ப்பும் உண்டு எனும் நற்சிந்த னையை வளர்த்து கொள்வதும் தான். அப்படி ஒரு மனமாற்றத்தை நந்தன் நிச்சயமாக உரு வாக்கும். இன்னும் பழமைவாத, சமூகத்துக்கு ஒவ்வாத கருத்தியல்கள் நாளடைவில் முழு மையாக உடைபடும் என்பதையே நடப்பு நிகழ்வுகள் காட்டுகிறது. தானா எல்லாம் மாறாது; நாம் தான் அதை மாற்றும் சக்தி களாக இருக்க வேண்டும் என்பதையும் நந்தன் உணர்த்துகிறது. நந்தனின் வெற்றி எளியவர்களின் வெற்றி. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட வர்களின் போராட்ட வெற்றி. இந்த சமூகத் தில் சமத்துவம் நிலைக்க நந்தன் பேசு பொரு ளாக இருக்கட்டும். விரிவான தளங்களில் நந்தனை பற்றி பேசுவோம், கொண்டாடுவோம்.

Share.

Leave a Reply