ஒத்த வார்த்தையில தலைவன் ரசிகர்களை சாச்சுப்புட்ட சூர்யா: அண்ணா நீங்க வேற லெவல்

0

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார் சூர்யா.பல்வேறு நகரங்களில் கங்குவா படத்தை விளம்பரம் செய்வதுடன் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்கு சென்று கங்குவா படத்தை விளம்பரம் செய்தார்.

தம்பி கார்த்தியை போன்று தெலுங்கில் சரளமாக பேச வரவிட்டாலும் விரைவில் மொழியை கற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார் சூர்யா. மேலும் தலைவன் என தெலுங்கு ரசிகர்கள் மட்டும் அல்ல தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடும் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் Unstoppable நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் சூர்யா.

பாலகிருஷ்ணாவை பார்த்ததும் அவர் காலை தொட்டு ஆசி பெற்றார். கார்த்தி தன் போனில் உங்க பெயரை எப்படி சேவ் செய்திருக்கிறார் என பாலய்யா கேட்டதற்கு முதல் கேள்வியே அவுட்டாஃப் சிலபஸ் சார் என சிரித்தார் சூர்யா. கேள்வி கேட்டால் உண்மை சொல்லவா, பொய் சொல்லவானு கேட்டு பாலய்யாவின் கண்கள் சிவக்க வைத்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு பேசிய விதம் க்யூட்டாக இருந்தது. பாலகிருஷ்ணா கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் விழித்தார். கிரஷ் பற்றி பாலகிருஷ்ணா கேட்டதும் வீட்டை நினைத்து பதில் அளிக்காமல் சிரித்தார் சூர்யா.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

மேலும் ஜோதிகா இல்லாமல் தன் வாழ்க்கை இல்லை என்று சூர்யா சொன்னது ரொம்ப டச்சிங்காக இருந்தது.

இதற்கிடையே சூர்யா பொய் சொல்வதாக கார்த்திக்கு போன் செய்து தெரிவித்தார் பாலகிருஷ்ணா. எங்க அண்ணன் சிறுசுல இருந்தே அப்படி தான் சார் என போட்டுக் கொடுத்தார் கார்த்தி.

அம்மா வீட்டில் இருந்தா விட மாட்டாங்க, அதனால் அவங்க இல்லைனா இதை தான் செய்வோம்: ஸ்ரீதேவி மகள் குஷி கபூர்

அண்ணனை மாட்டிவிடுவதில் அம்புட்டு சந்தோஷம். இருக்காதா பின்ன?. சிறு வயதில் கார்த்தியை டார்ச்சர் செய்து சந்தோஷப்படுவதையே வேலையாக வைத்திருந்திருக்கிறார் சூர்யா. அதனால் தற்போது பழிவாங்கிவிட்டார் கார்த்தி.

Sk-வை வாழ்த்தி தள்ளிய சீமான்

ஜெய் பாலய்யா என்று சொல்லி பாலய்யாவின் மொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் சூர்யா. இந்நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வாங்க சூர்யா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.

Leave a Reply