சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் மிகப்பிரம்மாண்டமாக திரையில் வெளியாகின்றது. இப்படத்தின் முதல் காட்சி மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே திரையிடப்படுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் அதிகாலை காட்சிக்காக படக்குழு அனுமதி கோரியது. இதையடுத்து கங்குவா படத்திற்கு காலை 9 மணி முதல் காட்சிகளை திரையிடலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது
கடைசியாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காண ஆவலோடும் ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்காக தற்போது கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
அமரன் இயக்குனரிடம் கங்குவா தயாரிப்பாளர் சொன்ன விஷயம்..சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கோபம்..!
சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ட்ரைலர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தமிழ் சினிமாவில் முறையான பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் முதல் படம் கங்குவா என்றும் சொல்லப்படுகின்றது. தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகின்றது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக கங்குவா ஆயிரம் கோடி வசூலை அடிக்கும் என கணிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் திரையில் வெளியாகவுள்ளது. மற்ற மாநிலங்களில் கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை. காலை 11 மணிக்கு தான் தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு அனுமதி. இருப்பினும் கங்குவா படக்குழு சிறப்பு காட்சி கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு கங்குவா படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி முதல் கங்குவா காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கங்குவா படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் பாசிட்டிவான டாக் இருந்து வருகின்றது.
கேரளவை அதிர விட்ட ரோலக்ஸ்
இதுவரை படத்தை பார்த்த சிலர் படம் சிறப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கங்குவா அமையும் என்றும் கூறுகின்றனர். எனவே கங்குவா திரைப்படம் சூர்யா எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்று தரும் என நம்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.