கங்குவா படத்திற்காக சூர்யா செய்த தியாகங்கள்..விவரம் உள்ளே..!

0

கங்குவா ரிலீஸ்

சூர்யா மற்றும் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கங்குவா படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால் இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் கங்குவா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது

தியாகங்கள்

சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும் திரைப்படம் தான் கங்குவா. தன் கரியரில் கங்குவா மிக முக்கியமான படம் என்பதால் இப்படத்திற்காக சில தியாகங்களை சூர்யா செய்திருக்கின்றார். இப்படம் முடிவடையும் வரை சூர்யா தினம் பலமணி நேரம் உடற்பயிற்சி செய்தாராம். வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை தவிர அதிக நேரம் சூர்யா உடற்பயிற்சி செய்தாராம். மேலும் கங்குவா படத்திற்காக சூர்யா தன் சம்பளத்தில் இருந்து சில கோடிகளை குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் படம் முடிவடைந்து வியாபாரம் ஆன பிறகு தான் சூர்யா தன் முழு சம்பளத்தையும் வாங்கியதாக தகவல் வந்துள்ளது.ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

வெற்றி முக்கியம்

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால் அப்படங்கள் திரையில் வெளியாகாமல் OTT யில் மட்டுமே தான் வெளியாகின. கடைசியாக சூர்யாவின் நடிப்பில் திரையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே சூர்யாவிற்கு தற்போது மிகப்பெரிய வெற்றிப்படம் தேவை.அதுவும் கங்குவா போன்ற ஒரு பிரம்மாண்டமான படைப்பு வெற்றிபெற்றால் சூர்யாவின் மார்க்கெட் பலமடங்கு உயரும். எனவே தான் இப்படத்திற்காக சூர்யா பல தியாகங்களை செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்திலேயே கங்குவா மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

பாசிட்டிவ் டாக்

கங்குவா திரைப்படம் இந்தியளவில் ஆயிரம் திரைக்கு மேல் வெளியாகின்றது. அதுமட்டுமல்லாமல் சோலோவாக இப்படம் வெளியாகின்றது. மேலும் கோலிவுட் வட்டாரத்தில் இப்படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வருகின்றது. படம் பார்த்த சிலர் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியளவில் கங்குவா படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் கங்குவா படத்தில் இருப்பதால் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் கங்குவா ஆயிரம் கோடி வசூலிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவதாக பலர் கூறுவதும் குறிப்பிடத்தக்கது

Share.

Leave a Reply