ஏழ்மையை வெற்றி கொள்வதற்காக சென்னைக்கு வந்து, தமிழ்த் திரையுலகில் ‘ஐயிட்டம் டான்ஸ’ராக நுழைந்து, நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சில்க் ஸ்மிதா.
கடும் உழைப்பு, திடீர் வெளிச்சம், பெரும் புகழ், பணம், அந்தஸ்து, காதல், கசப்பு, தற்கொலை என அவரது வாழ்வின் அத்தியாயங்கள் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வாசிக்கப்படுவதற்கு அவர் மீதான வெற்றுக் கவர்ச்சி மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை ஆசிரியர் 27 அத்தியாயங்களின் வழியாக ஆதாரச் செய்திகளின் அடிப்படையில் விவரித்துச் செல்கிறார். அவர் நட்சத்திரம் என்பதைத் தாண்டி ஒரு தென்னிந்திய ‘ஸ்டைல் ஐகான்’ ஆகவும் எப்படி மாறிப் போனவர் என்பதையும் நூல் பேசியிருக்கிறது.