மும்பை: ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் மனோஜ் பாஜ்பாய். அவர் நடிப்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான படத்தின் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. படுக்கையறை காட்சியில் இந்தளவுக்கு மோசமாக நடிக்க ஆரம்பித்துவிட்டாரே மனோஜ் பாஜ்பாய் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஓடிடியில் சென்சார் இல்லாத நிலையில், Despatch எனும் புதிய படம் கடந்த வாரம் இறுதியில் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. பிரபல பாலிவுட் இயக்குநர் கான் பெல் இந்த படத்தை இயக்கியுள்ளார். 151 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் பிரியமாணியின் கணவராக நடித்திருப்பார் மனோஜ் பாஜ்பாய். அதன் 2வது சீசனில் சமந்தாவை தேடிப் பிடித்து துரத்தும் காட்சிகளில் மிரட்டியிருப்பார்.
டைரக்ட் ஓடிடி ரிலீஸ்: சமீப காலமாக சில படங்கள் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விடுகின்றன. கடந்த டிசம்பர் 13ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் கான் பெல் இயக்கிய டெஸ்பேட்ச் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால் பத்திரிகையில் பணியாற்றி வரும் ஜாய் என்பவர் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாத சூழல் உருவாகிறது. அவர் தான் ஹீரோ. அவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஹர்ஷத் மேத்தா கதையை சுற்றி லக்கி பாஸ்கர் படம் போல இந்த படமும் நகர்வது குறிப்பிடத்தக்கது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
படுக்கையறை காட்சி: இந்திய சினிமாவிலேயே ஓடிடிகளின் ஆதிக்கத்தால் தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை எல்லை மீறிய ரொம்பவே வல்கரான படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. பாலிவுட் வெப்சீரிஸ் ஹீரோவாக அசத்தி வரும் மனோஜ் பாஜ்பாய் இந்த படத்தில் இளம் நடிகையுடன் லிப் லாக் முத்தம் கொடுத்து படுக்கையறை காட்சியில் பலான விஷயத்தை செய்வது போன்ற காட்சி ஒன்றை தற்போது நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
காண்டம் இல்லைன்னா வேண்டாம்: முத்தத்தை தாண்டி மத்த விஷயத்துக்கு இருவரும் உணர்ச்சி வேகத்தில் செல்லும் போது, உஷாராகி காண்டம் இல்லையான்னு மனோஜ் பாஜ்பாய் கேட்க, அதெல்லாம் வேண்டாம், நான் உன்னை காதலிக்கிறேன், உன்னோட குழந்தையை சுமக்க விரும்புறேன் என அந்த பெண் சொல்ல, உடனடியாக அதெல்லாம் முடியாது என தள்ளிவிட்டு ஓடும் காட்சியை நெட்டிசன்கள் ஷேர் செய்து மனோஜ் பாஜ்பாய் எந்தளவுக்கு இறங்கி நடிக்கிறார் பாருங்க என கிண்டலடித்து வருகின்றனர்.