கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் மடியில் தீபா இறந்துவிட அபிராமி குடும்பம் அதிர்ச்சியடைகின்றனர். மேலும் ஐஸ்வர்யாவும் போலீசிடம் சிக்கிவிடுகின்றார்.இதைத்தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை பாட வைப்பதற்காக முயற்சிகள் ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் தீபா பாடினால் அவளது உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபாவிற்கு சுயநினைவுகள் திரும்பி அவள் கச்சேரியில் பாட தொடங்க அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
சூர்யா vs தனுஷ்..சூடுபிடிக்கும் கோலிவுட்..சபாஷ் சரியான போட்டி..!
இதற்கிடையில் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வரும் டாக்டர் சக்தியை சந்தித்து தீபா பாடினால் அவங்க உயிருக்கே ஆபத்து என்று சொல்ல ஷக்தி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தீபா பாடி கொண்டிருக்கும் போதே மூக்கில் இருந்து ரத்தம் வடிய தொடங்க தீபா அதை எல்லாம் தாங்கி கொண்டு பாடி முடித்து கீழே விழ அனைவரும் பதற்றம் அடைந்து தீபாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
ஆனால் தீபா கார்த்தியின் கையை பிடித்து கொண்டு இல்ல வேண்டாம்.. நான் பிழைப்பது கஷ்டம்னு எனக்கு தெரிந்துடுச்சு. நான் இறந்து போனால் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக வாழனும் என சத்தியம் வாங்குகிறாள்.
அம்மா ஜானகியை பார்த்து அப்பா எங்கே என்று கேட்க அப்பா இப்போ வந்து விடுவார் என்று பொய் சொல்லி சமாளிக்கின்றனர். அபிராமியை பார்த்து நீங்க அத்தையாக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும் என்று சொல்கிறாள்.
இதையடுத்து அங்கு துப்பாக்கியுடன் வந்த ஐஸ்வர்யா தீபாவை சுட முயற்சிக்க துப்பாக்கி கீழே விழுந்து போலீசிடம் சிக்கி கொள்கிறாள். பிறகு மைதிலியிடம் இனிமே நீங்க தான் அம்மா அப்பாவை பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு கார்த்தியின் மடியில் உயிரை விடுகிறாள்.
THUG LIFE-ல கமல்ஹாசன் வேற மாறி தெறிக்க விட்டு இருக்காரு.!
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.