கே.ஜி.எஃப் 1 திரைப்படம் கன்னட சினிமாவின் வெற்றி எனவும், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்திய சினிமாவின் வெற்றி எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை தனது அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sivakarthikeyan on Yash: ‘It was the Kannada industry’s success when KGF 1 came, but when KGF 2 released, it was the Indian film industry’s success’
இதில் சிவகார்த்திகேயன் பேசும் போது, கன்னட நடிகர் யஷ் குறித்தும் அவர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக யஷ்ஷின் வெற்றி அவரது சினிமா வளர்ச்சியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைத்துறையையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்தியேனை போலவே யஷ்ஷும் தனது பயணத்தை சின்னத்திரையில் இருந்து தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
“எனக்கு எல்லோருடைய வேலையும் பிடிக்கும். நல்ல திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை நான் பார்ப்பேன். அப்படங்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், கன்னட திரையுலகிற்கு யஷ் செய்தது முக்கியத்துவம் வாய்ந்தது. கேஜிஎஃப் 1 கன்னட சினிமாவின் வெற்றி; கேஜிஎஃப் 2 இந்திய சினிமாவின் வெற்றி. யஷ் தனது சினிமா பயணம் மட்டுமில்லாமல், கன்னட சினிமாவையே மற்றொரு புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றார். யஷ்ஷுக்கு எனது வாழ்த்துகள் எப்போதும் இருக்கும்” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். மேலும், பின்னணி பாடகர், கவிஞர், சினிமா தயாரிப்பு போன்ற பணிகளையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.
தனது கல்லூரி நாள்கள் குறித்து நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன், தனது பேராசிரியர்கள் போன்று மிமிக்ரி செய்ததையும், அதன்பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தை மறைந்த பின்னர் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அப்போது, பார்வையாளர்களிடம் கிடைத்த விசில் சத்தம் மற்றும் கைத்தட்டல்களே தனக்கு மருந்தாக செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு தகவல்களை சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டார்.