பேட்ட படத்தின் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் பற்றி தெரியுமாSource : instagram
அமிதாப் பச்சன் தொடங்கி ஷாருக்கான் வரை சினிமாவில் ஹிட் அடிப்பதற்கு முன்பாக மிகவும் சாதாரண வேலை பார்த்து, பல்வேறு போராட்டங்களை சந்தித்து தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்திருப்பார்கள். நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஒரு காலத்தில் கன்டக்டராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நபர் ஒருவர், இன்று பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை கோடிகளில் சம்பளம் வாங்கும் சூப்பர் வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் நவாசுதீன் சித்திக்.
உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த நவாசுதீன் சித்திக், தனது குடும்பத்திற்காக வேதியியலாளராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் சேர வைத்தது. தனது கனவை நனவாக்க நவாசுதீன் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். பெரிய பொருளாதார வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதற்காக சில சமயம் கொத்தமல்லி விற்றும், சில நேரங்களில் வாட்ச்மேனாகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படி படாதபாடு பட்டு நடிப்பைக் கற்று கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தவரை பலரும் அவமதித்துள்ளனர். அவரது உருவத்தைக் கேலி செய்து “அசிங்கமான முகம் இதையெல்லாம் யாரு பார்ப்பாங்க” என கேவலப்படுத்தியுள்ளனர். இதனால் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால், சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்துள்ளார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
1999 இல் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், அமீர் கான் நடித்த சர்பரோஷ் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்தார். இதனையடுத்து இவர் சிறிய வேடங்களில் நடித்த பிளாக் ஃப்ரைடே, தேவ் டி படங்கள் நவாசுதீனை கவனிக்க வைத்தது. 2012 இல் வெளியான கஹானி திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சல்மான் கானின் “கிக்” படம் மூலம் சிறந்த வில்லன் நடிகராக கவனம் ஈர்த்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட” படத்தில் கூட வில்லனாக நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நவாசுதீன், ஒரு படத்திற்கு ரூ.10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். தற்போது அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 96 கோடி ரூபாயாகும்.