கோலிவுட் ஜேம்ஸ் பாண்ட்.. கோட் சூட்டில் அஜித் குமார்.. விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் முடியலையா?

0

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் கூடவே கடைசிகட்ட படப்பிடிப்பு என்கிற அறிவிப்பை சற்றுமுன் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்திற்காக உடல் எடையை குறைத்த நிலையில், அதே லுக்கில் தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதி ஷெட்யூலிலும் நடிக்கப் போகிறார்.

கோட் சூட் அணிந்துக் கொண்டு கோலிவுட் ஜேம்ஸ் பாண்ட் போலவே அஜித் மாறியிருக்கும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.

விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான நிலையில், படத்தின் பாடல்களுக்காக வெறித்தனமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பு இன்னமும் நிறைவடையவில்லை என்கிற குண்டையும் தூக்கிப் போட்டுள்ளனர்.

குட் பேட் அக்லி ஷூட் ஓவர்: விடாமுயற்சி படத்துக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பே முடிந்துவிட்டதாக ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில், அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை குறுகிய காலத்தில் முடித்துக் கொடுத்த அஜித் குமார் மீதம் உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்ப தற்போது நடிக்கவுள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

எங்கே பார்த்தாலும் த்ரிஷா: விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்குச் சென்ற நடிகை த்ரிஷா அடுத்து சூர்யாவுடன் கோவையில் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் அஜித் குமாருடன் வெளிநாட்டுக்கு பறந்து இருக்கிறார். அஜித் குமார், த்ரிஷா, மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

பொங்கல் ரிலீஸ்: இந்த அறிவிப்பிலும் லைகா நிறுவனம் விடாமுயற்சி பொங்கல் என்றே அறிவித்துள்ளது. குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரு படங்களும் கடைசியாக பொங்கலுக்கு வெளியாகி விடப்போகிறது என்றும் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஜனவரி மாதம் விடாமுயற்சி மற்றும் பிப்ரவரியில் குட் பேட் அக்லி என வெளியிடுங்கள் அடுத்த வருஷம் அஜித் வருஷம் தான் என ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Share.

Leave a Reply