சினிமாவின் அரசியல்..அரசியலின் சினிமா..வைரமுத்துவிடம் மனம்விட்டு பேசிய ரஜினிகாந்த்..!

0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்துக்கொண்டு வருகின்றார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி அடுத்ததாக நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி -கமல் ?பரபரக்கும் கோலிவுட்..!

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி கூலி படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதைப்பற்றி வைரமுத்து சமீபத்தில் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்டவாறு,

கடிகாரம் பாராத

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

உரையாடல்

சிலபேரோடுதான் வாய்க்கும்

அவருள் ஒருவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

80நிமிடங்கள்

உரையாடியிருக்கிறோம்

ஒரே ஒரு

‘கிரீன் டீ’யைத் தவிர

எந்த இடைஞ்சலும் இல்லை;

இடைவெளியும் இல்லை

சினிமாவின் அரசியல்

அரசியலின் சினிமா

வாழ்வியல் – சமூகவியல்

கூட்டணிக் கணக்குகள்

தலைவர்கள்

தனிநபர்கள் என்று

எல்லாத் தலைப்புகளும்

எங்கள் உரையாடலில்

ஊடாடி ஓய்ந்தன

எதுகுறித்தும்

அவருக்கொரு தெளிவிருக்கிறது

தன்முடிவின் மீது

உரசிப் பார்த்து

உண்மை காணும்

குணம் இருக்கிறது

நான்

அவருக்குச் சொன்ன

பதில்களைவிட

அவர் கேட்ட கேள்விகள்

மதிப்புமிக்கவை

தவத்திற்கு ஒருவர்;

தர்க்கத்திற்கு இருவர்

நாங்கள்

தர்க்கத்தையே

தவமாக்கிக் கொண்டோம்

ஒரு காதலியைப்

பிரிவதுபோல்

விடைகொண்டு வந்தேன்

இரு தரப்புக்கும்

அறிவும் சுவையும் தருவதே

ஆரோக்கியமான சந்திப்பு

என வைரமுத்து ரஜினியை சந்தித்ததை பற்றி பதிவிட்டுள்ளார்

THUG LIFE-ல கமல்ஹாசன் வேற மாறி தெறிக்க விட்டு இருக்காரு.!

இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கூலி திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகும் என தெரிகின்றது.

கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூலை பெறவே இல்லை. அந்த சாதனையை கூலி திரைப்படம் நிகழ்த்தி காட்டும் என தமிழ் சினிமாவால் நம்பப்படுகின்றது.

Share.

Leave a Reply