“சினிமாவை விட்டு விலக விருப்பம்” – அல்லு அர்ஜுன் சர்ச்சைக்கு மத்தியில் ‘புஷ்பா’ இயக்குநர் ஷாக்!

0

புஷ்பா-2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் இறந்தது தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

டிசம்பர் 4 ஆம் தேதி புஷ்பா-2 படம் வெளியான நிலையில், அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், படக்குழுவினருடன் படம் பார்த்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்த நிலையில், பெண் உயிரிழந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என விவரங்களை தருமாறு, காவல்துறை அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த 3 மணிநேரமாக அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புஷ்பா இயக்குநர் சுகுமார் சினிமாவில் விலக விருப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

Also Read | Viduthalai 2: கலிய ‘பெருமாள் வாத்தியார்’ யார்? – விடுதலை படத்தின் உண்மையான ஹீரோ!

தமிழ் சினிமா இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் ஹிரோவாக நடித்துள்ள இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஜன.10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்துகொண்ட ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார், “இந்தப் படத்தில் ராம் சரண் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று பாராட்டினார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் இயக்குநர் சுகுமாரிடம் “உங்களிடம் எதாவது விஷயத்தை விட்டுவிட சொன்னால் எதை விடுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சற்றும் யோசிக்காமல் அடுத்த நொடியே, “சினிமா” என்று சினிமாவை விட்டு விலக விரும்புவதாக தெரிவித்தார்.

இதை கண்டு ஷாக் ஆன ராம் சரண் அது கூடாது என்று கூறும் விதமாக சுகுமாரிடம் இருந்து மைக்கை பிடுங்கி சினிமாவை விட்டு விலகக்கூடாது என்று கூறினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share.

Leave a Reply