சினிமா விமர்சனங்களுக்கு தடைக்கோரிய வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்களால் படங்கள் தோல்வி அடைவதாகவும், விமர்சனங்களை முறைப்படுத்த விதிமுறைகள் வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் நடித்த நடிகர் மற்றும் படத்தின் இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு கூறப்பட்டது.

Also Read : வெள்ளத்தில் அடித்துச் சென்ற மிர்ச்சி சிவா பிஎம்டபிள்யூ கார்… கூலாக பகிர்ந்த தகவல்..!

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

எனவே திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதித்து உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.

இந்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

Share.

Leave a Reply