சிவகார்த்திகேயன் தற்போது அமரன் வெற்றியினால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான அமரன் அந்த எதிர்பார்ப்புகளை மீறி வெற்றிநடைபோட்டு வருகின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இப்படம் தயாரானது. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்திலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க சீரியஸான படமாக வெளியான அமரன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இதுவரை அமரன் திரைப்படம் 200 கோடி வரை வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிகின்றது. வசூலில் மட்டுமல்லாமல் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை ஒரு நடிகராகவும் அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
Delhi Ganesh: மறைந்த நடிகர் டெல்லி கணேஷிற்கு இருந்த ஒரே ஆசை இதுதானாம்
இப்படத்தில் முகுந்த் வரதராஜனாகவே சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தும் இருக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் SK23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மேலும் இது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாகவும் உருவாகவுள்ளது.
இப்படமும் முழுக்க முழுக்க சீரியஸான கதைக்களத்தில் தயாராக இருக்கின்றது. முதலில் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் லோகேஷ் இப்படத்தில் நடிக்க மறுக்க வேறொரு நடிகரை சுதா கொங்காரா தேடி வருகின்றார். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிக முக்கியமான பாத்திரம் என்பதால் பிரபலமான ஒருவர் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என சுதா கொங்காரா திட்டமிட்டுள்ளார்.
ரஜினி மாஸ் யாருக்கும் வராது… விஜய் மாநாடே நடத்த முடியல…!
அதன்படி இப்படத்தில் வில்லனாக மிகப்பெரிய ஹீரோ ஒருவர் நடிக்கவுள்ளாராம். அந்த ஹீரோ யார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமான ஹீரோ தான் SK25 படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என தெரிகின்றது. ஆனால் அது யார் என தற்போது வரை சஸ்பென்சாகவே உள்ளது. விரைவில் SK25 படத்தின் வில்லன் யார் என வெளியே தகவல் கசியும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.