பெய்ஜிங்: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மகாராஜா. இந்தப் படத்தினை நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். படத்தில் அனுராஹ் காய்ஷப், அபிராமி, சாச்சனா, நட்டி, திவ்யபாரதி, சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படம் ஆகும். பொதுவாக தமிழ் சினிமா நடிகர்களுக்கு 25வது படம் மற்றும் 50வது படங்கள் வெற்றிப்படமாக மாறாது.
ஆனால், இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. படம் தற்போது சீன மொழிக்கு டப் செய்யப்பட்டு, கடந்த 29ஆம் தேதி சீனா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் எதார்த்த நடிப்புக்கு பெயர்போன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடக்க காலங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டும் இல்லாமல், பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். செக்கச் சிவந்த வானம் போன்ற படங்கள் எல்லாம் இவர் கதையின் மைய கதாபாத்திரமாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மகாராஜா. அடுத்து வெளியாகவுள்ள படம் விடுதலை பாகம் 2.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
சீனா ரிலீஸ்: இப்படியான நிலையில் மகாராஜா படம் சீனாவில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனா முழுவதும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ஏற்கனவே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்தியத் திரைப்படத் திருவிழாவில், திரையிடப்பட்டது. இதனால் மகாராஜா படம் மீது தனி கவனம் ஏற்பட்டது.
வசூல்: படம் உலகத்தரத்தில் இருந்ததால் படத்தினை சீனாவிலும் ரிலீஸ் செய்ய சீனாவைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்து படத்தினை ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். படம் மொத்தம் 40 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தினை இதுவரை பார்த்த ரசிகர்கள், படம் குறித்து பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், படத்தின் வசூல் எகிறி வருகின்றது. படம் இரண்டு நாளில் ரூபாய் 20 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. படம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடினாலே, நூற்றுக்கணக்கான கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்துவிடும்” எனவும் கூறப்படுகின்றது.