சென்னை: சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவையாக உள்ளது. இந்த தொலைக்காட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு போட்டியாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது மகாநடிகை ரியாலிட்டி ஷோ. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய பெண்கள், தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமையில் இரவு 8:30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை என்ற ரியாலிட்டி ஷோவில், புதிய நாயகிக்கான தேடல் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன நடத்தப்பட்டு, அதில் நடிப்பால் மிரள வைத்த 10 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை ஆர். ஜே விஜய் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சரிதா, விருமாண்டி புகழ் அபிராமி, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்ட விஜய் ஆண்டனி ஆகியோர் நடுவர்களாக சிறப்பித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வோரு விதமான ரவுண்டில் வைக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர், இந்த வகையில் இந்த வாரம் ஆக்ஷன் ரவுண்ட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஆக்ஷன் சுற்றில்,
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தமிழ் சினிமா கொண்டாடிய ஆக்ஷனை காட்சிகளை ரீ கிரியேட் செய்து பெண் போட்டியாளர்கள் நடித்து காட்ட உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், பெண் போட்டியாளர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளனர்.
சின்னத்திரை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மகாநடிகை என்ற இந்த ரியாலிட்டி ஷோவில் பெண் போட்டியாளர்கள் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது இதுவே முறையாகும். வரும் ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பாருங்க.