சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், தற்போதே பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ஹேப்பி பர்த்டே தலைவா என வாழ்த்த ஆரம்பித்துவிட்டனர்.
74 வயதில் எல்லாம் இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டு பாக்ஸ் ஆபிஸில் பாக்ஷாவாக இருப்பதெல்லாம் இனிமேல் எந்தவொரு தமிழ் சினிமா நடிகருக்கும் கற்பனையாகத்தான் இருக்கும் என்கின்றனர்.
ஆனால், ரஜினிகாந்த் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியதா என்றால் அதுதான் கிடையாது. பல தடைகளையும், தோல்விகளையும் சோதனைகளையும் சந்தித்து தான் இந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். ரஜினிகாந்த் இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகத் தொடங்கி வெளியாகாத 8 இந்தி படங்கள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
துஹி மெரி ஜிந்தகி (Tu Hi Meri Zindagi): தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இப்போதுதான் இந்தியில் படம் பண்ணுகின்றனர். ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் அந்த காலத்திலேயே பல இந்தி படங்களில் நடித்துவிட்டனர். 1983ம் ஆண்டு வெளியான அந்தா கனூன் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1990ம் ஆண்டு ஸ்ரீதேவி, ரிஷி கபூர், வினோத் கன்னாவுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த Tu Hi Meri Zindagi திரைப்படத்தை பக்கோடியா இயக்கி வந்தார். ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
தக்ராவோ (Takrao): இயக்குநர் ஹர்மேஷ் மல்கோத்ரா இயக்கத்தில் 1986ம் ஆண்டு உருவான தக்ராவோ படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்ருகன் சின்ஹா இணைந்து நடித்தார். அனிதா ராஜ், அம்ரிஷ் புரி, சுஷ்மிதா செத் உள்ளிட்ட பலர் நடித்த அந்த படமும் அப்படியே ரிலீஸ் ஆகாமல் டிராப் ஆனது.
ஷனாகத் (Shanaakht): கேஜிஎஃப் 2, லக்கி பாஸ்கர் படங்களில் நடித்த டின்னு ஆனந்த் இயக்கத்தில் 1988ம் ஆண்டு அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித், மாதவி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்த ஷனாகத் திரைப்படத்தில் இருந்து அமிதாப் பச்சன் முதலில் வெளியேறினார். அவருக்கு பதிலாக அந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால், கங்கா யமுனா சரஸ்வதி படம் போலவே இந்த படம் இருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக அந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது.
கர் கா பேடி (Ghar Ka Bhedi): பாலிவுட் இயக்குநர் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித் நடிப்பில் 1990ம் ஆண்டு உருவான கர் கா பேடி படமும் பாதியிலேயே நின்றுவிட்டது. தயாரிப்பாளர் சத்யன் பால் செளத்ரி தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படமும் அறிவிப்புக்குப் பின் கிடப்பில் போடப்பட்டது.
இந்த படங்களும் வெளியாகவில்லை: இயக்குநர் சுபாஷ் தயாரித்து இயக்கிய ராஷ்டா பத்ரோன் கா (Raashta Pathron Ka), இயக்குநர் பாப்பு இயக்கத்தில் 1986ம் ஆண்டு ஹேமா மாலினி உடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த பெயரிடாத படம், சச்சின் பாஃபிக் இயக்கத்தில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லால் டூஃபான், 1991ம் ஆண்டு ரவி தத் இயக்கத்தில் உருவான வாதன் கே சவுதாகர் உள்ளிட்ட படங்கள் வெளியாகாமல் நிறுத்தப்பட்டன. பல கஷ்டங்களையும் சரிவுகளையும் சந்தித்து தான் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் ஸ்டைல் சாம்ராட்டாக இந்திய திரையுலகில் இன்றும் முடி சூடா மன்னனாக திகழ்கிறார். இந்த படங்கள் எல்லாம் திட்டமிட்டபடி வெளியாகி இருந்தால் அப்போதே பாலிவுட்டில் மிகப்பெரிய பான் இந்தியா ஸ்டாராக மாறியிருப்பார்.