சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த நடிகர் ரஜினிகாந்த் தனது 74 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்ப்பூரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
74 வயதிலும் இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக நடிகர் ரஜினிகாந்த் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படம் அளவுக்கு வசூல் வேட்டையை நடத்தவில்லை.
விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் தமிழ் சினிமாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி தரவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகியுள்ள கூலி திரைப்படம் அந்த சாதனையை தமிழ் சினிமாவில் நிகழ்த்தி பெருமை சேர்க்கும் என ரஜினி ரசிகர்கள் தற்போது#Coolie ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகின்றனர்.
74 வயது: இந்திய சினிமாவில் பாலிவுட் பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் என கொண்டாடி வரும் நிலையில், நாளை நடிகர் ரஜினிகாந்த் தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக இனிமேல் அரசியல் பக்கம் செல்ல வேண்டாம் என்கிற முடிவை எடுத்த ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து ஓய்வு எடுக்காமல் உழைத்து வருகிறார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
ஆயிரம் கோடி கனவு: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் 500 கோடி ரூபாய் வசூலை கடந்து தென்னிந்திய சினிமாவில் வியக்கும் அளவுக்கு சாதனைகளை நிகழ்த்தி வந்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கோலிவுட் திரைப்பட உலகுக்கு இன்னமும் கனவாகவே உள்ளது. விஜய் நடித்த லியோ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் 600 கோடி வசூலை கடந்த ஆண்டு கோலிவுட் பெற்றுத் தந்தன. ஆனால், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்கள் அசால்ட்டாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் எந்த உச்ச நடிகர் அந்த சாதனையை படைக்கப் போகிறார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
கூலி சாதனை படைக்கும்: ரெக்கார்டு மேக்கரான ரஜினிகாந்த் தனது கூலி படத்தின் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டு கண்டிப்பாக அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டுவார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தலைவா என . பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் போலி திரைப்படம் நிச்சயம் 1000 கோடி வசூல் வேட்டை நடத்துவது உறுதி என்கின்றனர்.
அமீர்கான் இருக்கிறார்: தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை கடக்க முடியாமல் போவதற்கு காரணம் இந்தி ரசிகர்களை அந்த படங்கள் பெரிதாக கவர்வதில்லை. புஷ்பா 2 திரைப்படம் இந்தியிலேயே 350 கோடி வசூலை கடந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் அமீர்கான் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள நிலையில், கண்டிப்பாக இந்தி ரசிகர்கள் மத்தியிலும் கூலி சம்பவம் செய்யும் என்றும் அமீர்கான் கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்துள்ள நிலையில், அவரது கம்பேக் அதிரடி காட்டும் என்கின்றனர்.