ஜோதிகாவுக்காக கதை பிடிக்காமல் சூர்யா நடித்த திரைப்படம்! சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?

0

சூர்யா ஜோதிகாவுடன் நடித்த திரைப்படம் ஒன்றில் விருப்பமே இல்லாமல் நடித்திருந்தாலும்… அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற கதையை அண்மையில் சூர்யா பகிர்ந்துள்ளார்.

Actor Suriya

கோலிவுட் திரையுலகமே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா- ஜோதிகா இருவரும் காதல் ஜோடிகளாக இருந்த போது, நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யா – ஜோதிகா இருவரும் திருமணத்துக்கு முன்பு இணைந்து நடித்த, ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் காதல் படங்களை விரும்பி பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது. ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மென்மையான ரொமான்டிக் ட்ராமா ஜானரில் வெளியானது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

இந்த படத்தின் கதையை இயக்குனர் ஒப்பேலி கிருஷ்ணா கூறும் போது… சூர்யாவுக்கு ஏனோ கதை மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லையாம். ஆனால் ஜோதிகாவுக்கு அவருடைய குந்தவை கதாபாத்திரம் பிடித்துப் போனதால், இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிய வந்தவுடன், யாரோ ஒருவர் ஏன் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்? அதை நாமே செய்துவிடலாம் என அரை மனதோடு தான் இந்த படத்தில் நடிக்க சம்பாதித்தார்.

Share.

Leave a Reply