Akhil Akkineni Engagement : பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு இன்று திருமணம் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை நாகார்ஜூனா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் கூட, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு திகழும் ஒரு மூத்த நடிகர் தான் நாகர்ஜுனா. இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா. அண்மையில் அவருக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.