Kanguva and Thangalaan : இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் கையாண்டிராத ஒரு புதிய கதைகளத்தோடு நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகிறது. சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்குகிறார், சுமார் 450 கோடி ரூபாய்க்கு மேல் மெகா பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவென்றால் அது மிகையல்ல. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கான புக்கிங் பெரிய அளவில் நடந்து வருகிறது.