தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பிரபல காமெடி நடிகரும், தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 65 ஆன நிலையில் சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிறு வயதிலேயே கராத்தே, பாக்சிங் ஆகியவை கோதண்டராமன் கற்றதாக கூறப்படுகிறது. இவரது ஆர்வத்தினைப் பார்த்த கராத்தே மாஸ்டர் இவரை ஸ்டண்ட் யூனியனில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
அதிலிருந்து தனது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் பணியை தொடர்ந்து இருக்கிறார். இவர் ராம்கி நடித்த எல்லாமே என் பொண்டாட்டி தான், சிவாஜி நடித்த எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
மேலும் விஜய், அஜீத் நடித்த ஆக்சன் படங்களான பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்ற படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி உள்ளார்.
இதுமட்டுமன்றி பல படங்களில் துணை வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த கோதண்டராமனுக்கு சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் மூலம் புதிய அடையாளம் கிடைத்தது. பின்னர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது வீட்டில் காலமானர்.
இவரது மறைவுக்கு பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.