தமிழ் சினிமா 2024 ..எதிர்பார்ப்பின்றி வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட்டடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை..!

0

2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை தமிழ் சினிமாவை இரண்டாக பிரிக்கலாம். ஜூன் மாதத்திற்கு முன்பு ஜூன் மாதத்திற்கு பிறகு என தமிழ் சினிமாவை இரண்டாக பிரிக்கலாம். ஜூன் மாதத்திற்கு முன்பு வரை தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் ஆகிய படங்கள் சறுக்கின.

அதன் பிறகு வெளியான சிறு பட்ஜெட் திரைப்படங்களும் பெரிதாக ஒர்கவுட் ஆகவில்லை. படம் நன்றாக இருந்தாலும் திரையில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. அதற்கு தேர்தல் ஒரு காரணம் என்றே சொல்லலாம். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றதால் அந்த காலகட்டத்தில் எந்த ஒரு பெரிய படமும் வெளியாகவில்லை. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் வெளியாகின.

திடீரென ட்ரெண்டாகும் கங்குவா..குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..என்ன காரணம் தெரியுமா ?

ராயன், இந்தியன் 2, GOAT, வேட்டையன், கங்குவா, தங்கலான் என அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாகி தமிழ் சினிமா மீண்டும் பிக்கப்பாக துவங்கியது. இந்நிலையில் இதெல்லாம் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான படங்கள். ஆனால் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

மகாராஜா

முதலில் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் ஜூன் மாதம் வெளியான மகாராஜா திரைப்படத்தை தான் சொல்லவேண்டும். மகாராஜா திரைப்படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான படங்கள் சில தொடர் தோல்விகளை சந்தித்தன. இதையடுத்து விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா வெளியானது. என்னதான் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா இருந்தாலும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தான் இப்படம் வெளியானது. ஆனால் படத்திற்கு பாசிட்டிவான டாக் வர வர இப்படம் பிக்கப்பானது. தற்போது சீனாவில் அதிக வசூலித்த தமிழ் படம் என்ற பெருமையை பெரும் அளவிற்கு மகாராஜா படத்தின் வெற்றி இருக்கின்றது.

லப்பர் பந்து

அடுத்ததாக அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் போது இதுவும் வழக்கமான கிரிக்கெட் படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள். படத்திற்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் படம் வெளியான பிறகு எங்கு பார்த்தாலும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வந்தது. கிரிக்கெட் மட்டுமல்லாமல் காதல், மோதல், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் கூறும் படமாக லப்பர் பந்து அமைந்தது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது.

கருடன்

இதையடுத்து சூரி நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படமும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வெளியானது. வழக்கமான கிராமத்து பின்னணி கொண்ட படமாக தான் கருடன் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. என்னதான் கருடன் வழக்கமான கதையாக இருந்தாலும் திரைக்கதையின் மூலம் அசத்தியிருந்தார் இயக்குனர்.விடுதலை படத்திற்கு பிறகு சூரி நாயகனாக நடித்த இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. சூரியுடன் இணைந்து இப்படத்தில் சசிகுமாரும் நடித்திருந்தார்.

தளபதி 69 ரிலீசுக்கு முன்பை வசூலை தொடங்கி மாஸ் காட்டி வருகிறது

இந்நிலையில் இந்த மூன்று படங்களும் குறைவான எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply