இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘LIK’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்துள்ள காரியம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வலம் வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் பணிகளின் போது இருவரும் காதலில் விழுந்த நிலையில், திருமணம் செய்து தற்போது தங்களது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையில் சமீபத்தில் இவர்களது திருமணம் மற்றும் நயன்தாராவின் சினிமா பயணம் குறித்து ஆவணப்படம் ஒன்று வெளியானது.
இந்த ஆவணப்படம் தொடர்பாக தனுஷ், நயன்தாரா இடையில் மோதல் ஒன்றும் ஏற்பட்டது. தனது ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படக்காட்சிகளை பயன்படுத்த விடாமல், பழிவாங்கும் நோக்கத்துடன் தனுஷ் செயல்பட்டதாக நயன்தாரா கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷை விமர்சித்து பதிவுகளை பகிர்ந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
அப்பாவின் திடீர் மரணம்.. மனமுடைந்து நடிகை சமந்தா பகிர்ந்த பதிவு!
இதனால் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்தனர். இதனிடையில் பான் இந்தியா இயக்குனர்கள் கலந்து கொண்ட டைரக்டர் ரவுண்ட் டேபிள் நேர்காணலில் விக்னேஷ் சிவன் கலந்துக்கொண்டார். இதனையடுத்து பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் பங்கேற்றது எப்படி? என நெட்டிசன்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு மத்தியில் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் விக்கி தற்போது, ட்விட்டர் அக்கவுண்டை செயலிழக்க செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனிமே உலக நாயகன் இல்லை..?
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறது. இதனிடையில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தில் இருந்து சமீபத்தில் பாடல் ஒன்று வெளியாகி வேறலெவல் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.