திரிஷாவுக்கு என்னதான் ஆச்சு?.. இப்படியெல்லாம் பேசுறாங்களே.. புலம்பும் ரசிகர்கள்

0

சென்னை: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மேலும் பிருந்தா என்ற வெப் சீரிஸும் ரிலீஸானது. இவற்றில் லியோ கலவையான விமர்சனத்தை பெற்றது; அதேபோல் பிருந்தா வெப் சீரிஸும் அந்த ரேஞ்சில்தான் இருந்தது. அடுத்ததாக அவர் விடாமுயற்சி, தக் லைஃப், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இத்தனை வருடங்கள் கழித்தும் திரிஷா பீக்கில் இருப்பதை பார்த்து கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமான திரிஷா ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் தலை காட்டினார். அதற்கு பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகுக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் அடிமையானார்கள். அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ரஜினிகாந்த், கமல் ஹாசன் என வரிசையாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார்.

சரிந்த மார்க்கெட்: தொடர்ந்து படுபிஸியாக நடித்துவந்த திரிஷா இடையில் சின்ன சறுக்கலை சந்தித்தார். சூழல் இப்படி இருக்க பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 படம் திரிஷாவுக்கு மீண்டும் தரமான கம்பேக்கை கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த ஜானு என்ற கதாபாத்திரம் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரம் போலவே கொண்டாடப்பட்டது. அதனையடுத்து திரிஷாவுக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இதனால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மீண்டும் லைம் லைட்டில்: ஒரு நடிகை குறைந்தபட்சம் 10 வருடங்கள் டாப்பில் இருப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் திரிஷாவோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப்பில் இருக்கிறார். 96 படத்துக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதற்கு பிறகு விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் நடித்தார். மேலும் GOAT படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

Allu Arjun: So Lovely.. அப்பானா சும்மாவா.. மகன் எழுதிய கடிதம்.. எமோஷனலான அல்லு அர்ஜுன்..!

முன்னணி ஹீரோக்களுடன்: திரிஷாவின் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் திரிஷாவும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும் விடாமுயற்சி படத்தின் டீசரில் திரிஷாவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அருமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறினார்கள். சூழல் இப்படி இருக்க திரிஷா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

திரிஷாவின் லேட்டஸ்ட் போஸ்ட்: இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை வைத்திருக்கிறார். அதில அவர் உங்களுக்கு ஒரு நாள் லீவ் கிடைத்தது என்றால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஒருவரிடம்கூட சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திரிஷா சமீபமாக இன்ஸ்டாவில் தத்துவமாக வைக்கிறாரே. அப்படி அவருக்கு என்னதான் ஆகிவிட்டது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Share.

Leave a Reply