நயன்தாரா மற்றும் த்ரிஷா தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலேயே பிரபலமான நடிகைகளாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரே காலகட்டத்திற்குள் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்கள். சூர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் த்ரிஷா. அதே சமயம் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா.
ஆனால் நயன்தாரா என்ட்ரி கொடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே த்ரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது சாமி திரைப்படம் தான் என்றே சொல்லலாம். மௌனம் பேசியதே என்னதான் வெற்றிப்படமாக இருந்தாலும் சாமி படத்திற்கு பிறகு தான் த்ரிஷாவிற்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கின.
அனிருத் வந்ததற்கு பிறகு என்னை யாருமே அப்படி அழைக்கவில்லை : தனுஷ்
விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் த்ரிஷா. அதைப்போல நயன்தாரா சந்திரமுகி என்ற தன் இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்துவிட்டார். இருப்பினும் சிம்புவின் வல்லவன் திரைப்படம் தான் நயன்தாராவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவரும் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
இவ்வாறு இருவரின் கரியரும் சரி சமமாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. இருப்பினும் நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரில் யார் டாப்பில் இருக்கின்றார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் போய்க்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக நயன்தாராவை விட த்ரிஷா பல படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்த த்ரிஷா அதைத்தொடர்ந்து லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகின்றார். படத்திற்கு படம் அவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. மறுபக்கம் நயன்தாரா சோலோ நாயகியாக நடித்து வருகின்றார்.
இருந்தாலும் சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்கள் ஹிட்டடிக்கவில்லை.
இருப்பினும் அவரின் மார்க்கெட் மற்றும் சம்பளம் குறைந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரும் 10 கோடி வரை சம்பளமாக வாங்குகின்றனர். ஆனால் த்ரிஷா அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார். அடுத்ததாக சூர்யா 45 திரைப்படத்திலும் த்ரிஷா தான் நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தல வேண்டாம் AK…உலகநாயகன் வேண்டாம் KH
இவ்வாறு அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட்டாவதால் த்ரிஷாவின் சம்பளமும் மார்க்கெட்டும் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. என்னதான் நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருந்து தான் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.