திருநெல்வேலி: எழுத்தாளராக அறியப்பட்ட வேல.ராமமூர்த்தி இப்போது தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் அவர் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர்; சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரது பேத்தி வைஷ்ணவிக்கு நடந்த திருமணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாவது அவ்வப்போது நடந்துவருவதுதான். கவிஞர் விக்ரமாதித்யன் நான் கடவுள், அங்காடித் தெரு, கவிஞர் ஜெயபாலன் ஆடுகளம் படத்திலும் நடித்திருக்கிறார்கள். நடிகர்களாக மட்டுமின்றி அவர்கள் எழுதிய கதைகளும் சினிமாக்களாக மாறுவதும் வழக்கம். அந்தவகையில் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா, சி.சு.செல்லப்பா, பாஸ்கர் சக்தி என ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகள் சினிமாக்களாக மாறியிருக்கின்றன.
வேல. ராமமூர்த்தி: அந்தவகையில் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியும் ஒருவர். அவர் அடிப்படையில் ஒரு இராணுவ வீரர். அவர் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதன்முறையாக அவர் 2013ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் வரவேற்பை பெற்றது. முக்கியமாக வேல.ராமமூர்த்தியின் ரோல் நல்ல பெயரை பெற்றது.
அய்யோ அவருடன் ட்ராவல் செய்யவே முடியாது.. தனுஷுக்கு விவாகரத்து.. பகீர் கிளப்பிய பிரபலம்
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
நடிப்பில் பிஸி: மதயானைக் கூட்டம் படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் பிஸியாகிவிட்டார். அந்தவகையில் அவர் கொம்பன், பாயும் புலி, சேதுபதி, அப்பா, கிடாரி, தொண்டன், அறம், மெஹந்தி சர்க்கஸ், நம்ம வீட்டுப்பிள்ளை, என்னை நோக்கி பாயும் தோட்டா, அண்ணாத்த என ஏகப்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தையும், வில்லன் கதாபாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பினால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர்; எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தையும் ஏற்றிருந்தார்.
ஏற்கனவே ஃபேமஸ்: சினிமாவில் மட்டும் வேல. ராமமூர்த்தியை தெரிந்தவர்களுக்கு இப்போது அவர் ஃபேமஸ்தான். ஆனால் புத்தகங்கள் வாயிலாகவே அவர் ஃபேமஸ் ஆகிவிட்டார். குறிப்பாக அவர் எழுதிய குற்றப்பரம்பரை நாவல் பலரையும் கவர்ந்த ஒன்று. அதைத்தான் இயக்குநர் பாலா படமாக எடுக்க முயன்றார். அந்த விஷயத்தில்தான் அவருக்கும், பாரதிராஜாவுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு பிரச்னை வெடித்தது. இப்போது அந்த நாவலை சசிக்குமார் படமாக எடுக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
SK24 movie: சூர்யாவை தொடரும் சிவகார்த்திகேயன்.. நாளைக்கு சிறப்பான சம்பவம் இருக்கு!
திருமணம்: இந்நிலையில் வேல. ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவியின் திருமணம்தான் கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வைஷ்ணவி திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகன் என்பவரின் மகன் விஜய ராகுலை திருமணம் செய்திருக்கிறார். அந்தத் திருமணத்தில் மணமக்கள் இருவரும் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன மாலையை கழுத்தில் போட்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி தங்கத்தால் ஆன மலரையும் மணமகள் சூடியிருந்தார்.
600 சவரன் நகை: இது ஒருபக்கம் இருக்க திருமணத்தில் மணமகள் அணிந்திருந்த நகை மட்டும் மொத்த 600 சவரன் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் வைஷ்ணவி அணிந்திருந்த புடவையின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்றும்; ப்ளவுஸ் 3 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரமாண்ட திருமணம் திருநெல்வேலியை மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது.