சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது புகார்கள் குவிந்தன. தெலுங்கு மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தலைமறைவான கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர்.
அமைதிப்படை, சின்னவர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தர் நடிகை கஸ்தூரி, இதன் பின்னர் ஒரு சில படங்களில் கவர்ச்சிப்பட பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். சமீபகாலமாக சமூகப்பிரச்சனைகளில் அதிகரித்த ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். மேலும் தனது சமூகவலைதளத்தின் மூலம் கருத்துகளையும் பாஜக ஆதரவு நிலைப்பாடு தொடர்பான கருத்துகளை கூறினார். இந்த நிலையில் பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் போராட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி,