மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஹனி ரோஸ். கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயம் ஆனவர். இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘பாய் பிரண்ட்’ என்ற படத்தின் வாயிலாக அறிமுகம் ஆனவர் ஹனி ரோஸ். இதனையடுத்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தமிழிலும் காந்தர்வன், ஜீவாவின் ‘சிங்கம் புலி’, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சுந்தர் சி ஜோடியாக ‘பட்டாம்பூச்சி’ படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கிலும் பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்மா ரெட்டி’ படத்தில் நடித்தார். இப்படி தொடர்ச்சியாக தென்னிந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். சினிமாவில் நடிப்பதை தாண்டி கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார் ஹனி ரோஸ். இந்நிலையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக செம்மனூர் நகைக்கடை அதிபர் பாபி மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
‘கோட்’ படத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மீனாட்சி சௌத்ரி.. என்ன இப்படி சொல்லிட்டாங்க.!
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
ஹனி ரோஸின் புகாரை தொடர்ந்து கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து தொழிலதிபர் பாபி செம்மனூரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பாபி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘ஒருவர் தன்னை பற்றி வேண்டுமென்றே இரட்டை அர்த்த வார்த்தைகள் மூலம் அவமானப்படுத்தி வருவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவிற்கு பல கமெண்ட்கள் குவிந்தது. இதனையடுத்து, தன்னுடைய பதிவிற்கு ஆபாசமாக கமெண்ட்களை பதிவிட்டவர்களுக்கு எதிராக நடிகை ஹனி ரோஸ், எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை ஹனி ரோஸின் புகாரின் பேரில் தற்போது தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆசிரியர் பற்றிநான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா மற்றும் வர்த்தகம், பங்குச்சந்தை சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன்…. மேலும் படிக்க