நல்ல மனுசனுக்குத்தான் சீக்கிரமே மரணம் வந்துடுது.. தீபா சங்கர் மகனுக்கு மயில்சாமி செய்த உதவி

0

சென்னை: தமிழ் சினிமா உலகில் சிறந்த குணம் கொண்டவர் எனப் பெயரெடுத்தவர்களில் மறைந்த நடிகர் மயில்சாமியும் ஒருவர். அவர் இருக்கும்போதே, அவர் குறித்து பல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர். அதேபோல், அவர் மறைந்த பின்னர் திரைப்பிரபலங்கள் தொடங்கி, பொதுமக்கள் வரை பலரும் அவர் குறித்தும், அவர் செய்த உதவிகள் குறித்தும் கூறியுள்ளனர். இப்படியான நிலையில் நடிகை தீபா சங்கர் தனது மகனின் மருத்துவச் செலவுக்கு கேட்காமலேயே, மயில்சாமி உதவி செய்ததாக கூறியுள்ளார்.

மயில்சாமி இயல்பாகவே உதவும் குணம் கொண்டவர்.. இதுமட்டும் இல்லாமல், தன்னிடம் யாராவது உதவி எனக் கேட்டு வந்தால், தன்னிடம் பணம் இருந்தால் அந்த உதவியை காலதாமதப்படுத்தாமல், உடனே செய்துவிடுவார். அல்லது, அதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கிவிடுவார். அதுவே தன்னிடம் பணம் இல்லை என்றால் கொஞ்சம் கூட தயங்காமல் தனக்குத் தெரிந்த நடிகர்கள் பலரிடம் பேசி, பணம் வாங்கி அந்த உதவியைச் செய்து கொடுப்பவர் நடிகர் மயில்சாமி. அதாவது, யாசகம் பெற்றாவது உதவவேண்டும் என்ற உயரிய பண்போடு வாழ்ந்துள்ளார் மயில்சாமி.

இது ஒருபுறம் இருக்க, மயில்சாமி மறைந்த பின்னர், பலரும் அவர் குறித்து பல்வேறு விஷயங்களைக் கூறினர். அதில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, நடிகர் மயில்சாமி குறித்து பேசினார். அதாவது, அவரும் மயில்சாமியும் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது காரில் மயில்சாமி ரூபாய் 500 இருக்கும் கட்டினை வைத்துக்கொண்டு இருந்துள்ளார். போகும் வழியில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளனர். உடனே காரை நிறுத்தி, அவர்கள் அனைவருக்கும் ஒரு ஒரு 500 ரூபாய் நோட்டாக எடுத்துக் கொடுத்துள்ளார். அவரிடம் பணம் வாங்கிய தொழிலாளார்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

மயில்சாமி: இது தொடர்பாக மயில்சாமி சாரிடம் நான் கேட்டபோது, ‘எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க பாரு. அதுதான் முக்கியம். காசு மறுபடியும் சம்பாதிச்சுக்கலாம். இந்த சந்தோசம் கிடைக்குமா?’ என பதில் கேள்வி எழுப்பியதாக கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

தீபா சங்கர்: இப்படியான நிலையில் நகைச்சுவை நடிகை தீபா சங்கர் தனது மகனின் மருத்துவ உதவிக்கு மயில்சாமி கேட்காமலேயே பணம் கொடுத்து உதவினார் என செம எமோஷனலாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நானும் மயில்சாமி அண்ணனும் இணைந்து நடித்தோம். எனது மகனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது தெரிந்ததும் மயில்சாமி அண்ணன் எனக்கு போன் செய்து, பையனுக்கு உடம்பு சரியில்லைனு கேள்வி பட்டேன், எவ்வளவு பணம் தேவைப்படும் எனக் கேட்டார். எனக்கு அப்போது ரொம்பவும் அதிர்ச்சி ஆகிவிட்டது. ஏனென்றால் நமது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். கடவுளிடம் எதாவது நமக்குத் தேவை என்றால், சாமி எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்றுதான் கேட்போம். ‘

கடவுள்: ஆனால் நான் கேட்காமலே எனக்கு கொடுத்த கடவுள் அண்ணன் மயில்சாமிதான்” எனக் கூறியுள்ளார். மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து நடிகை தீபா சங்கர் கூறியுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இது போன்ற நல்ல மனிதர்கள்தான் விரைவிலேயே மறைந்துவிடுகின்றார்கள் எனவும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் மயில்சாமி கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply