நான் எதுக்கு பயப்படணும்.. தனுஷுக்கு எதிராக அப்படி அறிக்கை விடுத்தது ஏன்?.. நயன்தாரா ஓபன் டாக்!

0

சென்னை: தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் தனிநபர் தாக்குதல் அதிகமாக இருந்ததாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகை நயன்தாரா தனுஷை பற்றி சொல்வதெல்லாம் உண்மை தான் என அவருக்கு ஆதரவாக மலையாள நடிகைகளும் தனுஷ் உடன் இணைந்து ஹீரோயின்களாக நடித்த நடிகைகளுமே லைக் போட்டது மேலும், சர்ச்சையை பெரிதாக்கியது.

நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் படத்தில் கமிட்டாகி நடித்தனர். அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. “தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே”, “நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே” என ஒவ்வொரு பாடலையும் நயன்தாராவை நினைத்தே உருகி உருகி விக்னேஷ் சிவன் எழுதிய நிலையில், அதை நயன்தாராவிடமும் தெரியப்படுத்தி அவரது காதலை கைப்பற்றினார்.

கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடைபெற்றது. நெட்பிளிக்ஸில் கடந்த நவம்பர் 18ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் காட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் தனுஷ் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியது தான் நயன்தாராவை ரொம்பவே காயப்படுத்தியது.

நயன்தாரா பேட்டி: வட இந்திய மீடியா ஒன்றுக்கு நடிகை நயன்தாரா நேற்று அளித்த பேட்டி தான் தற்போது மீண்டும் நயன்தாராவை டிரெண்டாக்கி உள்ளது. அந்த பேட்டியில் தனுஷுக்கு எதிராக அப்படியொரு அறிக்கையை வெளியிட்டது ஏன் என்கிற கேள்விக்கு நயன்தாரா நேரடியாகவே பதில் அளிக்கிறேன் என ஓபனாக உடைத்துப் பேசியுள்ளார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

நான் ஏன் பயப்படணும்: நான் செய்யும் செயல் சரி என எனக்குத் தோன்றும் போது நான் ஏன் மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும் என நயன்தாரா கூறியுள்ளார். மேலும், என்னோட ஆவணப்படத்தை சேல் பண்ணனும்னு நான் பண்ண பிஆர் ஸ்டன்ட் என சிலர் விமர்சித்தனர். ஆனால், அதெல்லாம் கிடையாது. எங்களின் காதலின் அறிமுகமான இடத்தையும் தருணத்தையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவே அந்த காட்சிகளையும் பாடல் வரிகளையும் பயன்படுத்த நினைத்தோம். 4 வரிகளுக்காக இப்படியொரு வழக்கு தேவையா? என நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு போன் கால் பண்ணியிருந்தா?: நடிகர் தனுஷை சந்தித்து பேச எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. அவரது நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்தாலும் எதுவும் நடக்கவில்லை. ஒரு போன் கால் பண்ணி பேசியிருந்தா, என்ன பிரச்சனை, எப்படி சரி செய்யலாம் என பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல் இத்தனை பெரிய நடிகர், ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டு இப்படி மோசமாக நடந்துக் கொண்டது தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என நடிகை நயன்தாரா தனுஷுக்கு எதிராக ஓம் நமச்சிவாயா என போட்டு எழுதிய 3 பக்க கடிதம் ஏன் என்பதற்கு தனது புதிய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். இந்த ஆண்டு தமிழ் சினிமா கொஞ்சம் கூட எதிர்பாராத சண்டையாகவும் இது மாறியது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave a Reply