பாண்டியனை காப்பாற்றிய தங்கமயில்..உருகும் சரவணன்..!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனை தங்கமயில் காப்பாற்ற அனைவரும் தங்கமயிலிடம் பாசத்தை காட்டுகின்றனர்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் அப்பா மற்றும் அம்மா தேவை இல்லாமல் குலதெய்வம் கோயில் என்று வாய் விட்டு விட்டார்கள். அதனால் வேறு வழி இல்லாத தங்கமயிலின் அப்பா ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு கோவிலை காட்டி இதுதான் எங்கள் குலதெய்வம் கோயில் என்று சொல்லி பாண்டியன் குடும்பத்தை கூட்டிட்டு போய் விட்டார்கள். என்னதான் பாண்டியன் கோவிலுக்கு வந்தாலும் தங்கமயில் மீது இன்னும் கோபமாக தான் இருக்கின்றார்.

தங்கமயிலிடம் முகம் கொடுத்து கூட பாண்டியன் பேசவில்லை. இதையடுத்து பாண்டியன் ஒரு ஓரமாக போனில் பேசிக்கொண்டிருந்த போது மேற்கூரை கீழ விழா போவதை தங்கமயில் பார்த்துவிடுகிறார். உடனே தங்கமயில் மாமா என்று கத்தி பாண்டியனை தள்ளிவிட்டு தங்கமயில் மேல் கூரை விழுந்து விட்டது. இதையடுத்து மொத்த குடும்பமும் தங்கமயிலின் மீது திடீர் பாசத்தை காட்ட துவங்கிவிட்டனர்.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி -கமல் ?பரபரக்கும் கோலிவுட்..!

குறிப்பாக பாண்டியன் தங்கமயிலை மீண்டும் புகழ ஆரம்பித்துவிட்டார். இதற்கு மேல் சரவணனும் உருகி உருகி தங்கமயிலை பார்த்துக்கொண்டு வருகின்றார். அடுத்ததாக கதிர், அப்பாவிடம் சொன்னபடி மாத சம்பளமாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். அதையும் பாண்டியன் வாங்கி யாருக்கும் தெரியாமல் கோமதியிடம் கதிர் அக்கவுண்டில் இந்த பணத்தை போட்டு விடு என்று சொல்கிறார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

உடனே கோமதி, நீங்கள் கதிர் பணத்தையும் செந்தில் கடையில் வேலை பார்க்கிற பணத்தையும் ஒவ்வொருவருக்கும் தனியாக அக்கவுண்டில் போடுற விஷயத்தை அவங்களுக்கு தெரியப்படுத்தலாம். முன்னாடி மாதிரி இப்பொழுது கிடையாது ஒவ்வொருவருக்கும் பொண்டாட்டிகள் வந்து விட்டாச்சு. அதனால் நாம் என்ன பண்ணுகிறோம் என்று தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கோமதி சொல்கிறார்.

THUG LIFE-ல கமல்ஹாசன் வேற மாறி தெறிக்க விட்டு இருக்காரு.!

அதற்கு பாண்டியன், என்னை பற்றி யாரும் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.மறுபக்கம் ராஜி தான் டியூஷன் எடுக்க அனுமதி வாங்கித்தருமாறு கோமதியிடம் கூறுகின்றார்.கோமதியும் இந்த விஷயத்தை பாண்டியனிடம் எப்படி சொல்வது என தெரியாமல் நிற்கின்றார்.இதையடுத்து கதிர் ராஜியின் செலவுக்காக பணம் கொடுக்க அதனை வாங்க மறுக்கின்றார் ராஜி. விரைவில் டியூஷன் எடுக்க போறேன்.என் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறுகின்றார் ராஜி.

Share.

Leave a Reply