தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பின் தனது விருப்பத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல நடிகர்கள் குறித்தும்; அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் குறித்தும் இங்கு காணலாம்!
சதி லீலாவதி (1936) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கோலிவுட் சூப்பர் ஸ்டார் MGR; நாடோடி மன்னன் (1958) திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உலகம் சுற்றும் வாலிபன் (1973), மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978) திரைப்படங்களை இயக்கியதும் இவரே!