பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக் குறைவால் காலமானார்

0

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவு 1 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்துள்ளார்.

டெல்லி கணேஷ் கடந்த 1944ம் ஆண்டு நெல்லையில் பிறந்தார். டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.

நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து சினிமாவில் தனி இடம் பிடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

Share.

Leave a Reply